தொடரும் வழக்குகளால் திணறும் வைத்தியர் அர்ச்சுனா!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் கடந்த 03.07.2024 முகநூல் நேரலையை பதிவிட்ட வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மறுநாள் 04.07.2024 யாழ் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கேதீஸ்வரன் தொடர்பில் தனது முகநூல் ஊடக அபாண்டமான ஆதரமற்ற அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் முகநூலில் நேரலை செய்தமைக்கு எதிராக கடந்த 09.11.2024 வெள்ளிக்கிழமை பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் ஐந்து கோடி ரூபா மானநஷ்டம் கோரி (வழக்கு இலக்கம் - மானநஷ்டம் 20037/24 ) தீங்கியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை அருச்சுனாவிற்கு எதிராக 19 குற்றவியல் வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் இது முதலாவது குடியியல் வழக்காகும்.
கருத்துகள் இல்லை