தந்தையும் மகளும் சடலமாக மீட்பு!!


 நீர்கொழும்பு, முன்னக்கரை களப்பு பகுதியில் படகு விபத்தில் காணாமல் போன தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


முன்னக்கரை சிறிவர்தன்புர குளத்தில் நேற்று பிற்பகல் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


அதேபகுதியை சேர்ந்த 50 வயதுடைய ரணில் பெர்னாண்டோ எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் அவரது 18 வயதான மூத்த மகள் நிலுஷா நெத்மி பெர்னாண்டோ என்ற யுவதியுமே கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.


வெளிநாட்டிலிருந்து வந்த கத்தோலிக்க மதகுருவுடன் சிறிய மீன்பிடி படகில் 7 குடும்ப உறுப்பினர்கள் பயணித்துள்ளனர்.


இதன் போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் இருவர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் தந்தை மற்றும் மகளின்  சடலங்கள்   மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.