வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!!
தண்ணீர் குடிப்பதால் உடலில் பல நோய்கள் குணமாகின்றன. சிலர் அதிகமாக வெந்தீர் குடிக்கும் பழக்கமும் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். நமது உடலில் நீர்ச்சத்து என்பது மிகவும் முக்கியம் அதற்கு நாம் நீர் அருந்துதல் மிகவும் அவசியமாகும்.
உடலில் உள்ள வேறு விதமான நச்சுக்களை நீக்க நாம் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் கொதிநிலையில் இல்லாத வெதுவெதுப்பான நீரை தினமும் குடித்து வந்தால் உடலுக்கு நிறைய பலன் கிடைக்கிறது.
இதை காலை எழுந்தவுடன் வெறுவயிற்றில் குடிப்பது மிகவும் நன்மை தரும். எனவே இந்த வெந்நீரை குடிப்பதால் உடலில் என்னென்ன நோய்கள் குணமாகும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
காலை எழுந்தவுடன் வெறுவயிற்றில் வெந்நீர் குடித்தால் அது நமது உடலை நன்றாக சுத்தம் செய்யும். இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீரும், உப்பும் நமது உடலை விட்டு வெளியேறும்.
இந்த காரணத்தினால் நமக்கு மலச்சிக்கல் பிரச்சனை என்பது வராது. வயிறு சம்பந்தப்பட்ட வயிற்று வலி, உப்புசம் மற்றும் ஜீரண கோளாறு போன்றவற்றிற்கு இது ஒரு நிவாரணியாக மாறும்.
நாள்பட்ட நரம்பு சம்பந்தமான நோய்கள் இருப்பவர்களுக்கு வெந்நீர் வெறு வயிற்றில் அடிக்கடி குடிப்பது பலனளிக்கும். உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இளஞ்சூடு உள்ள நீரை குடித்துக்கொண்டு இருப்பது அவசியம்.
தற்போது பலருக்கு இருக்கும் நோய் என்றால் அது மன அழுத்தம் தான். இந்த மன அழுத்தம் குறைய வெறுவயிற்றில் வெந்நீர் குடிக்க வேண்டும். பலருக்கும் தவறான வாழ்க்கை முறையால் இப்போது சிறுநீரக பிரச்சனை வருகிறது.
இதை தடுக்க வெதுவெதுப்பான நீர் குடிப்பது நன்மை தரும். இது தவிர நுரையீரல், இருதயம் போன்றவை சுறுசுறுப்பாக செயல்படவும், உடம்பில் சளி போன்ற பிரச்சனைகளை நீங்கவும் இந்த வெந்நீரை அடிக்கடி குடிப்பது நல்லது. இந்த பலன்கள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை