சிந்திக்க!!
கடைசி பஸ் என்பதால்
களுவாஞ்சிக்குடிப் பயணி
கழுத்துறை பஸ்ஸில் ஏறவேண்டியதில்லை!
எல்லாச் சங்கீதங்களிலும்
சுதி கலைந்த சுரம்.
எல்லாச் சந்தைகளிலும்
பழுதுபட்ட சரக்குகள்.
எல்லாப் புத்தகங்களிலும்
எழுதப்படாத எழுத்துப் பிழைகள்.
எல்லாக் கைகளிலும்
கழுவப்படாத இரத்தக்கறை.
ஒற்றை விரல் நீட்டி
ஓரமாய் நிற்கிறேன்
எல்லாப் புள்ளடிகளிலும்
வாந்தி மணக்கிறது.
எல்லாச் சின்னத்திலும்
உஷ்ணம் அடிக்கிறது.
எல்லாத் தொகுதியிலும்
பிண நெடில் கிளம்புகிறது.
எல்லோர் வாய்களிலும்
மல வாடை வருகிறது.
ஒற்றை விரல் நீட்டி
ஓரமாய் நிற்கிறேன்
ஒருத்தனை
புத்தன் என்று கை காட்ட
எல்லோருக்கும்
இன்னுமொரு பித்தன் தேவைப்படுகிறான்.
ஒருத்தனை
அழகன் என அடிக்கோடிட
இன்னொருவன் அசிங்கமாய் ஆக்கப்படுகிறான்.
ஒருத்தனை
உயிர் என உச்சரிக்க
இன்னொருத்தன் மயிர் எனக் காட்டப்படுகிறான்.
ஒருத்தனை
சந்தணக்காடு எனக் காட்ட
இன்னொருத்தன்
சாக்கடைப் புழுவாய்த் தேடப்படுகிறான்
ஒற்றை விரல் நீட்டி
ஓரமாய் நிற்கிறேன்
தமிழனை
கடவுள் காப்பாற்றட்டும் - செல்வா
அமெரிக்காவை
கடவுள் ஆசீர்வதிக்கட்டும் - கமலா
வடகிழக்கை
கருநீல மை அரவணைக்கட்டும் - தமிழா
கடைசி பஸ் என்பதால்
களுவாஞ்சிக்குடிப் பயணி
கழுத்துறை பஸ்ஸில் ஏறவேண்டியதில்லை
அன்புடன்
சாம் பிரதீபன்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை