நட்டஈடு கேட்ட நடிகர் தனுஷ் - விளாசிய நயன்தாரா!!

 


நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படத்தின் டிரைலரில் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. 


குறித்த டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக நடிகர் தனுஷ் Legal Notice அனுப்பியுள்ளார். அந்த  Notice இல் பத்து கோடி ரூபா நட்டஈடு கேட்டுள்ள தனுஷ்க்கு நடிகை நயன்தார மூன்று பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பதில் கொடுத்துள்ளார்.


ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி இதனை நெட்பிளிக்ஸ் வெளியிடவுள்ளது.


காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாதிருப்பதன் வலி மிகவும் கொடுமையாகவுள்ளது.



நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம்.

ஆனால் எங்களின் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்களை மேற்கொண்டோம்.


அண்மையில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.



அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது. 


கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்" என குறித்த அறிக்கையில் தனுஷ் பற்றி நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். 


நானும் ரவுடிதான் படத்தை நடிகர் தனுஷ் அவருடைய வொண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த அறிக்கை இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.