மனிதர்களுக்குப் பின்னர் இவைதான் உலகத்தை ஆளுமா?

 


மனிதர்களுக்கு பின் உலகத்தை ஆட்சி செய்யும் விலங்கு பற்றிய தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


ரோபோக்கள் ஒரு நாள் உலகை ஆக்கிரமிக்கும் என்று நீண்ட காலமாக நம்பப்பட்டு வரும் நிலையில், மனிதர்களுக்கு பின் உலகத்தை விலங்கு ஆட்சி செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


பல்லலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டைனோசர்கள், மிகப்பெரிய யானைகள் உள்பட பல விலங்குகள் அழிந்து விட்டன. தற்போது, மனிதர்கள் பூமியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.


ஆனால், நடந்து கொண்டிருக்கும் போர்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் மனிதர்கள் தங்கள் சொந்த உலகத்தை அழிக்கும் விளிம்பில் உள்ளனர்.


இது தொடர்பாக ஏராளமான ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர். அந்தவகையில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உயிரியல் வல்லுனராக பணியாற்றும் டிம் கோல்சன் என்பவர், " மனிதர்கள் முற்றிலுமாக அழிந்து விட்டால் கடலில் வாழக்கூடிய ஆக்டோபஸ் (octopuses) உயிரினங்கள் அடுத்த நாகரிகத்தை உருவாக்கும்" என்று கூறியுள்ளார்.


முன்னொரு காலத்தில் உலகத்தில் டைனோசர்கள் ஆதிக்கம் செலுத்தியது போல கடல் வாழ் உயிரினமான ஆக்டோபஸ் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.


மேலும் அவர், ஆக்டோபஸ்கள் அதிக புத்திசாலித்தனம், சாமர்த்தியம், ஆர்வம் மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் திறன் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன என்பதை விளக்கியுள்ளார்.



கடலில் வேட்டையாடுவதற்கான வழிகளை மனிதர்கள் கண்டுபிடித்தது போல நிலத்தில் வேட்டையாடுவதற்கான வழிகளை ஆக்டோபஸ்கள் கண்டுபிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.