தேசிய உணவு மற்றும போசாக்குப் பாதுகாப்பை உருவாக்குதல்!


தேசிய உணவு மற்றும போசாக்குப் பாதுகாப்பை உருவாக்குதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு வழங்குதல் அரசின் முக்கிய பணியாவதுடன், ஒவ்வொரு பிரஜையின் குறைந்தபட்ச உணவுத் தேவை போதியளவிலும் தரப்பண்புடன் கூடியதுமான மலிவாகப் பெற்றுக் கொடுப்பதே அரசின் பிரதான நோக்கமாகும். இந்த நோக்கத்துடன் தொடர்புடைய உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவை ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


அதற்கான பல நடவடிக்கைகள் புதிய அரசாங்கத்தின் கொள்கை கொள்கைப்பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

 
அதன்படி, நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் உள்நாட்டில் உற்பத்தி செய்தல், குறைந்தபட்சம் 03 மாதங்களுக்கு போதியளவு அத்தியாவசிய உணவு சுயபாதுகாப்புத் தொகையைப் பேணுதல், நாட்டில் காணப்படும் உணவு இருப்புத் தொடர்பான தரவுத் தொகுதியைப் பேணுதல் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஏதுவான உற்பத்திகள், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் போன்ற செயன்முறைகளுக்குத் தனியார் துறையையும் பங்கெடுக்கச் செய்து பயனுள்ள வேலைத்திட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.