ஆழ்கடல் பகுதிகளில் பல நாள் படகுகளுக்கு எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதிகளில் பல நாள் படகுகளுக்கு எச்சரிக்கை. தயவு செய்து எச்சரிக்கையாக இருங்கள்.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் நீடித்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு அதிகம்.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதனால் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் மிக பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாளைய தினம் (டிசம்பர் 11) புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்கு கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை