வயிற்றுப்பிழைப்புக்கே பத்திரிகை!!
இன்றைய தமிழ்த்தேசியம் சந்தித்துள்ள நெருக்கடிக்கு யாழ்ப்பணத்தில் இருந்து இயங்கும் மூன்று பத்திரிகையின் ஆசிரியர்கள், சரவணபவன் (உதயன்), விசர்சுந்தரம் (வலம்புரி), வித்தியாதரன் (காலைக்கதிர்) ஆகியோர் தான் பிரதான காரணம்.
இந்த துரோகப்பட்டியலில் முதலாவது நபர் சரவணபவன். - இவர் 1980 களின் ஆரம்பத்தில் சப்ரா வங்கியை நடாத்தி பல கோடி ரூபா பணத்தினை கொள்ளையடித்து 1985 இல் உதயன் பத்திரிகை ஆரம்பித்தவர். சூழ்நிலை காரணமாகவும் பத்திரிகை விற்பனைக்காகவும் தமிழ்த்தேசியத்தினை விருப்பமின்றி சுமந்தவர் தமிழ்த்தேசியத்தினை விற்று பிழைப்பு நடாத்தியவர்.
2009 இற்கு பின்னர் புலிகளின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுள் பேரம்பேசி நுளைந்து தமிழ்த்தேசிய அரசியலை கூட்டமைப்பினை தனது இருப்பிற்காக கையாழத் தொடங்கினார். கூட்டமைப்பு பல சந்தரப்பங்களில் பல தமிழ்த்தேசிய விரோத நிலைப்பாடுகளை எடுத்திருந்தது. கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் பலர் பல தடவைகள் பல தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளை செய்திருந்தார்கள். எனினும் சரவணபவன் இத்தகைய குழறுபடிகள் பற்றிய விடயங்களை மக்களுக்கு தெரிய படுத்தாமல் கூட்டமைப்பின் குழறுபடிகளை மூடிமறைத்து,கூட்டமைப்பை பாதுகாத்தார். காரணம் கூட்டமைப்பை விமர்சித்தால் தனக்கு கூட்டமைப்பினுள் சீட் கடைக்காது என்ற ஒரேயொரு நோக்கத்திற்காகதான் கூட்டமைப்பின் குழறுபடிகளை மூடிமறைத்தார்.
அதே நேரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளை மக்கள் அறிந்தால் மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பக்கம் போனால் தங்களது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்ற காரணத்தினால் தமிழத்தேசிய மக்கள் முன்னணி தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் போராட்ங்களையும் அவர்களது தமிழ்த்தேசியம் தொடர்பான நிலைப்பாடுகளையும் இருட்டடிப்புச் செய்தார்.
தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிமீது தமிழத்தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கை இழந்த நிலையில் மக்கள் தமக்குரிய அடுத்த தெரிவாக ஜேவிபி யை தேர்ந்தெடுக்கும் ஒரு திக்கற்ற தவறான நிலைக்கு மக்களை கொண்டு போய்விட்டுள்ளார். இத்தகைய பொறுப்பற்ற பத்திரிகைச் செயற்பாட்டினால் தமிழ்த்தேசியத்திற்கு பெரும் துரோகம் செய்துள்ளார். பத்திரிகை தர்மம் என்பதன் அர்த்தம் சரவணபவனுக்கு தெரியாது. அவர் அதுபற்றி ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது.
இந்த துரோக பட்டியலில் இரண்டாவது நபர் வித்தியாதரன் - சரவணபவனின் தமிழ்த்தேசிய வியாபாரத்தில் முக்கிய பங்குதாரராக உதயன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராக இருந்தவர். 2010 இல் தனக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் தரவில்லை என சரவணபவனுடன் முரண்பட்டு கொண்டு உதயன் பத்திரிகையில் இருந்து விலகியவர்.
தனது 60 வது பிறந்த தினத்திற்கும் தனது மகளின் திருமண நிகழ்விற்கும் இனப்படுகொலையாளிகளான கோட்டபாய மற்றும் மகிந்த கூட்டணியை பிரதம விருந்தினரான அழைத்து சிறப்பித்தவர்
2009 இன் பின்னர் வித்தியாதரன் இந்திய கைக்கூலியாக செயற்பட்டுவருகிறார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்த பின்னர் தான் கொல்லப்பட்டார் என்ற பொய்யான பரப்புரையை இந்திய புலனாய்வுத்துறை வித்தியாரன் போன்ற சில கைக்கூலிகள் ஊடாகவே பரப்பி வந்தனர். இந்த வதந்தியை புலம்பெயர் நாடுகளில் வித்தியாதரன் பரப்பி வந்தார்.
2010 இன் பின்னர் ஐரோப்பாவிற்கு சென்றிருந்த வித்தியாதரன் டென்மார்க்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது தலைவர் பிரபாகரன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் தான் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்று கூறியிருக்கிறார். கூட்டத்தில் இருந்த தமிழ்த்தேசிய பற்றாளர்கள் வித்தியாதரனின் கதையை கேட்டு ஆத்திரமடைந்து மேடையில் ஏறி வித்தியாதரனுக்கு கதிரைகளால் தூக்கி தாக்கினார்கள். தாக்குதலை சமாளிக்க முடியாத வித்தியாதரன் கதறியவாறு மேடையில் இருந்த குதித்து தப்பியோடிவிட்டார்.
அதன் பின்னர் ஐரோப்பா பக்கமே வித்தியாதரன் போக நினைத்ததில்லை. அதன் பின்னர் வித்தியாதரனின் தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகள் இந்திய புலனாய்வாளரகளின் வழிகாட்டலில் இலங்கையில் தான் அரங்கேறிவருகிறது.
இவருக்கு என்று ஒரு நிலைப்பாடு கிடையாது. ஒரு கொள்கை கோட்பாடு கிடையாது. காலைக்கதிர் மாலைக்கதிர் என பல பத்திரிகைகளை நடாத்தி யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு முட்டுக்கொடுப்பதுதான் அவருடைய பணியாக இருந்தது. வித்தியாதரனின் சீர் கெட்ட பத்திரிகை செயற்பாடுகள் தமிழ்மக்களை ஒரு குழப்பமான சூழலுக்குள் தள்ளியது.
இந்த துரோகப்பட்டியலில் தமிழ்மக்களை பெரும் குழப்பத்தினுள் தள்ளிய மூன்றாவது நபர் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் விசர்சுந்தரம் என அழைக்கப்படும் விஜயசுந்தரம்.
இவர் 2000 ம் ஆண்டளவில் ஈபிடிபி கட்சியில் நிதி உதவியில் வலம்புரி என்னும் பத்திரிகையை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஈபிடிபி யினருக்கு சார்பான நிலைப்பாட்டில் இயங்கிவந்த பத்திரிகை 2010 இற்கு பின்னர் இந்திய சார்புநிலையில் இயங்கி வருகின்றது. பிரதான நோக்கம் இந்திய நிகழ்ச்சி நிரலை நகர்த்துவது. இந்திய நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்றபடி விக்கினேஸ்வரனை ஒரு சக்கரவர்த்தியாக காட்டி தமிழ்மக்களை விக்கினேஸ்வரனுக்கு பின்னால் அணிதிரட்டியவர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தோற்கடிக்க இந்தியா வகுத்த திட்டத்தினை தந்திரமாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர்.
இன்னொருபுறம், உதயன் பத்திரிகைக்கு அரசியலில் சரவணபவன் இருப்பது போல தனக்கு ஒரு அரசியல் பின்புலம் தேவையென கருதி விக்னேஸ்வரனை தனது அரசியல் வாரிசாக வளர்க்க முற்பட்டவர் விசர்சுந்தரம்.
இவரும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு பத்திரிக்கை நடாத்திவந்தாரே ஒழிய தமிழ் மக்களுக்கு நல்வழி காட்டவில்லை. இன்னொருபுறம் இந்திய ஏவுதலில் மதவாத்த்தினை தமிழ்மக்கள் மத்தியில் புகுத்தி தமிழ் மக்களை கூறுபோடும் இந்திய சதித்திட்டத்திற்கு வழிவகை ஏற்படுத்தி வருகின்றார்.
இந்த மூவரும் தமது வயிற்றுப்பிழைப்புக்கே பத்திரிகை நடாத்துகிறார்கள். இந்த மூவரையும் முடிவுகட்டினால் தமிழ்த்தேசிய அரசியலில் விடிவுபிறக்கும்.
கருத்துகள் இல்லை