சிதம்பர சக்கரத்தை பேய்பார்த்த நிலையில் இருந்த சந்திரசேகரன்!
யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சிதம்பர சக்கரத்தை பேய்பார்த்த நிலையில் இருந்த சந்திரசேகரன்.
கடந்த 13 ம் திகதி யாழ்ப்பாணக் கச்சேரியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை தலைமையதாங்கி நடாத்திய இராமலிங்கம் சந்திரசேகரன் சிதம்பர சக்கதர்தை பேய் பார்த்த நிலையில் இருந்ததாக கூறபப்டுகிறது.
ஒரு மாவட்ட மட்டத்தில் தொழில் வல்லுனர்கள் புத்திஜீவிகள் அரச அதிகாரிகள் பங்குபற்றுதலோடு மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றம் மற்றும் மாவட்ட அபிவிருத்தித் தேவைகள் தொடர்பில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தை சந்திரசேகரன் தலைமை தாங்கி நடாத்தியிருந்தார் எனினும் கூட்டத்தில் பங்குபற்றியோர் மற்றும் கூட்டத்தின் நோக்கங்கள் தொடர்பில் அதனை கையாழக்கூடிய கல்வித்தகுதியோ அனுபவமோ திறனோ சந்திரசேகரனுக்கு இருக்கவில்லை என பரவலாக விமர்சிக்கபடுகிறது.
சந்திரசேகரன் ஒரு பட்டதாரியோ அல்லது அரச நிறுவனத்தின் பணிபுரிந்த அனுபவமோ இல்லாதவர். அப்படிப்பட்ட ஒருவர் கற்றறிந்தவர்கள் தொழில் வலலுநர்கள் அதிகாரிகள் நிரம்பிய சபைஒன்றில் அதனை தலைமை தாங்கி நடாத்துவத்றகுரிய எந்த தகுதியும் இல்லாத ஒருவரின் கையில் அவரால் கையாழமுடியாத பெறுப்பு அனுர அரசினால் வழங்கப்பட்டுள்ளது.
இது குரங்கின் கையில் பூமாலை என்ற நிலையில் தான் யாழ்மாவட்ட அபிவிருத்தி என்ற விவகாரம் வந்துள்ளது. கூட்டத்தில் எல்லோரும் தங்கள் பாட்டிற்கு கருத்து தெரிவிப்பதும் கேள்வி கேட்பதும் தனிநபர்களை தாக்குவதும் என்ற வாறாக கூட்டம் மீனசந்தை போன்று நடைபெற்று முடிந்துள்ளது.
ஊழலை ஒழிப்போம் நாட்டை முனனேற்றுவோம் என்று போலிக் கோசங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றிய அனுர அரசு மகிந்தவின் அடித்தடங்களையே தானும் பின்தொடர்கிறது. மகிந்த ஆட்சிக்காலத்திலும் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தபடாமல் தமது அடியாட்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தி தமது அரசியல் அதிகாரத்திற்கு வர உதவியவர்கள் கவனிக்கப்பட்டார்கள். உதாரணமாக கடந்த காலத்தில் யாழ்மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக பாடசாலைகல்வியை 8 ம் வகுப்பு வரைகூட பூர்த்தி செய்யாத டக்கிளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டிருந்தார். போதிய கல்வியறிவற்ற டக்கிளஸ் தேவானந்தா மாவட்ட அபிவிருத்தியை தனது குறுகிய அரசியல் நோக்கம் கருதியே முன்னெடுத்திருந்தார். மகிந்த அரசை விமர்சித்து முறைமை மாற்றம் என கூக்குரலிட்டு ஆட்சியை கைப்பற்றிய ஜேவிபி தற்போது யாழ்மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முறையான கல்வியறிவில்லாத அரசதுறை அனுபவமில்லாத ஜேவிபியின் அடியாள் ஒருவர் தலைவராக நியமிக்கபட்டுள்மை கவலைக்குரியதொரு நிலையாகும்.
கருத்துகள் இல்லை