ஊழல் கறைகளை போக்குமா பொன்னாடை!📸
அண்மையில் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றி ஓய்வுபெறும் இராணுவ அதிகாரி ஒருவருக்கு யாழில் பல அரச அதிகாரிகள் இணைந்து பாராட்டுவிழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் இராணுவ அதிகாரிக்கு பொன்னாடை போர்த்தியவர்களில் யாழ்மாவட்ட அரச அதிபராக உள்ள பிரதீபன் என்பவரும் அடங்குகிறார்.
இவர் யாழ்மாவட்டத்தில் உள்ள ஊழல் மிக்க இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளில் முதன்மையானவர். யாழ்மாவட்டத்தில் பல ஊழல் முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர். 2010 ம் ஆண்டிற்கு முன்னர் யாழ்குடாநாட்டிற்கான தரைவழிப்பாதை மூடப்பட்டிருந்த காலத்தில் கப்பல் மூலமான யாழ்மாவட்டத்திற்கான இறக்குமதி செயற்பாடுகளில் பெருமளவு ஊழல் மோசடிகளில் அப்போதய அரச அதிபர் கணேஸ் அவர்களுடன் சம்பந்தப்பட்டிருந்தவர். கப்பல் மூலமான பல சரக்கு பொருள் இறக்குமதியில் பல கோடிரூபா ஊழல் செய்தவர் என்பதும் ஊழல் செய்த பணத்தில் கொழும்பில் அடுக்குமாடி வீடுகளையும் கொள்வனவு செய்திருந்தமை பலரும் அறிந்த விடயம். பின்னர் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலராக இருந்த காலத்தில் அப்பிரதேசத்திற்கான பல கட்டுமான ஒப்பந்த திட்டங்களிலும் பல கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டமையை அப்பொதய கோப்பாய் பிரதேச திட்டமிடல் அதிகாரியான திரு கிருஸ்னராசன் மேலதிகரிகளுக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்ற விசாரணையின் பிரகாரம் தண்டனை இடமாற்றமாக பிரதீபன் முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்டார். இந்த காலத்தில் அங்கையன் இராமநாதன் அவர்களை பிடித்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் இடமாற்றலாகி வந்துசேர்ந்தார். பின்னர் அங்கையன் அரசியல் செல்வாக்கிழந்து போகவே டக்கிளஸ் தேவானந்தாவின் செல்வாக்கினை பயன்படுத்தி யாழ்மாவட்ட அரச அதிபராக தன்னை ஆக்கிக்கொண்டார்.
இந்த யாழ்மாவட்ட அரச அதிபர் பதவிக்காக டக்கிளஸ் தேவானந்தாவை பின்கதவால் அணுகிய அதிகாரிகள் பலர். அதில் எழிலரசி அன்ரன் யோகநாயகமும் டக்கிளஸ் தேவானந்தாவுடன் தனக்கிருந்த செல்வாக்கினை உச்ச அளவில் பயன்படுத்திய ஒருவர். எனினும் அவருக்கு முன்னர் பிரதீபன் டக்கிளஸ் தேவானந்தாவின் பின்கதவால் நுளைந்து தனது நிலையை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இனி சந்திரசேகரனின் பின்கதவுக்கு பின்னால் இவர்கள் அணிவகுக்க வேண்டும்.
பிரதீபன் அண்மையில் இராணுவ அதிகாரிக்கு போர்த்திய பொன்னாடை அவரது ஊழல் மிக்க கறைபடிந்த கடந்த கால கறையை போக்க போதாது. ஜேவிபி யினரின் முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடையும் மாலையும் சாத்தி இன்னும் பல முயற்சிகளை பிரதீபன் முன்னெடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை