பெண் அழகு!!

 


அழகான பெண்களை உலகமே வியந்து பார்க்கும், உயர்த்தி வைக்கும்.


ஆனால் அதிஷ்டம் அவர்களை எப்போதும் 

குனிந்து பார்க்கும், தாழ்த்தி வைக்கும்! 


✍ இது நிஸார் கப்பானியின் கருத்து


வாசம் வீசாத மலர்கள் இருப்பது போலவே 

அதிர்ஷ்டம் இல்லாத அழகான பெண்களும் உண்டு!


✍ இது மஹ்மூத் தர்வேஷின் கருத்து 


அழகான பெண்ணுக்கும் கெட்ட அதிர்ஷ்டத்திற்கும் இடையே பூர்வ ஜென்ம பந்தம் உள்ளது போன்றே தெரிகிறது!


✍ இது கலீல் ஜுப்ரானின் கருத்து 


'பெண்ணின் பேரழகானது அவளின் அறிவிலும் ஆன்மாவிலும் தான் உள்ளது. 


அவளின் கவர்ச்சியானது அவளிடமுள்ள குணத்திலும் நடத்தையிலும் தான் உள்ளது. 


உலகமே அழிந்தாலும் ஆன்ம அழகு என்றும் அழியாதது. 


உடல் வாக்கும் கட்டழகும் சில காலம் நிலைத்து நிற்கும், பின்னர் காலத்தால் மறைந்து போகும். 


✍ இது என் கருத்து


✍ தமிழாக்கம் / imran farook

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.