யாழ்ப்பாண ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி.!!


தேவையான பொருட்கள்:


பாஸ்மதி அரிசி - 3 கப்


பட்டர் - தேவையான அளவு


நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்


நறுக்கிய பச்சைமிளகாய் - அரை கப்


சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி


நறுக்கிய பீன்ஸ் - 2 கப்


உள்ளி (பூண்டு) - 3 பல்


நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி


நறுக்கிய தக்காளி - ஒரு கப்


நறுக்கிய கோவா (முட்டைகோஸ்) - 2 கப்


மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி


கோழி இறைச்சி (பொரித்தது) - 2 கப்


உருளைக்கிழங்கு - ஒரு கப் (சிறியதுண்டுகள் பொரித்தது)


அஜினோமோட்டோ - தேவையான அளவு


எண்ணெய் - தேவையான அளவு


உப்பு - தேவையான அளவு


கறிவேப்பிலை - சிறிதளவு


லீக்ஸ் - 2 கப்


இறால் - 2 கப் (சுத்தம் செய்து பொரித்தது )


கத்தரிக்காய் - ஒரு கப் (சிறியதுண்டுகள் பொரித்தது)


செய்முறை:

பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து களைந்துக் கொள்ளவும். வாணலியில் பட்டர் போட்டு உருகியதும் அரிசியை போட்டு வறுக்கவும்.


அரிசியை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து ஆற வைக்கவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்

பச்சை மிளகாய்

பூண்டு

இஞ்சி ஆகியவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.


அவை பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ் போட்டு வதக்கி விட்டு நறுக்கிய காரட் சேர்த்து வதக்கவும்.


காரட் வதங்கிய பின்பு அதில் நறுக்கிய கோவா(முட்டைகோஸ்) போட்டு வதக்கவும்.


கோவா(முட்டைகோஸ்) போட்டு வதக்கிய பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.


தக்காளி குழைந்ததும் அதில் பொரித்த உருளைக்கிழங்கு மற்றும் லீக்ஸை சேர்க்கவும்.


அதன் பின்னர் பொரித்த கத்தரிக்காய் மற்றும் இறால் சேர்த்து வதக்கவும்.


இவையனைத்தும் நன்கு வதங்கியதும் அதில் பொரித்த கோழி இறைச்சி போட்டு வதக்கவும்.


எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத் தூள், கறிவேப்பிலை, தேசிக்காய் (எலுமிச்சம்பழ) சாறு, சோயா சாஸ் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்.


அதன் பிறகு ஆற வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.


குறிப்புகள்:

கறிவேப்பிலை துவையல் அல்லது இஞ்சித்துவையல் அல்லது வேறு ஏதேனும் துவையலுடன் பரிமாறவும்.


#tamilarul #Tamilarulmedia #tamilshorts #new #samayel #jaffnanews #jaffna #அற்புத #sujiaarthisamayal

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.