ரவி பொன்னுத்துரை அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சுரேஸ் பிரேமச்சந்திரன்..!
இன்று 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் வைற் ஹவுஸ் மண்டபத்தில் சுரேஸ் பிறேமச்சந்திரன் தலையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரும் தமது தோழரான கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற ரவி பொன்னுத்துரை அவர்களுக்கு அஞ்சலி செலித்தினார்.
ரவி பொன்னுத்துரை அவர்கள் 'வைகறை' இதழின் ஆசிரியாராகவும், சுற்றுச் சூழல் ஆர்வலராகவும் அதற்காக சர்வதேச நாடுகளுடனும் உறவைப் பேணுபவராகவும் தாயகத்தில் மரம்நடுகை, வீட்டுத்தோட்டம் போன்ற விடயங்களில் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதிலும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இவரை வைகறை ரவி என இலக்கியவட்டத்தில் அறியப்பட்டாலும் ஹெஸ் ரவி என்றே கட்சித்தோழர்களால் அழைக்கப்பட்டார்.
அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடந்த அஞ்சலி நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றினர்.
அவரது பூத உடல் இன்று மாலை வரை அவர் பிறந்த இல்லத்தில் உறவினர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் கனடா கொண்டு செல்லப்படுவதற்காக மாலை கொழும்பு கொண்டு செல்லப்படுகிறது.
சுரேஸ் பிரேமசந்திரன் தனது அஞ்சலி உரையில் இவ்வாறு தெரிவித்தார்...
தோழர் ரவி பொன்னுத்துரை நாற்பது வருடகால EPRLF தோழர் ஆவார். அவர் பல கனவுகளை சுமந்திருந்தார்.தமிழ் மக்களின் பொருளாதாரப் பலத்தை அதிகரிப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்ற பல சிந்தனைகளை கொண்டிருந்தார்.
தமிழ் மக்கள் எவ்வளவுதூரம் அரசியல் ரீதியாக பலவீனப்பட்டுப் போகின்றார்கள் என எண்ணி வருந்தினார். தமிழ்மக்களுக்காக கட்சிபேதங்களை மறந்து அனைவரும் ஒண்றிணைய வேண்டும் என விரும்பினார்.
24 மணிநேரமும் தமிழரின் எதிர்காலத்தைப்
பற்றியே பேசினார்.
தனது மாணவப்பருவத்தில் இருந்து இன்றுவரை தனது இனத்திற்காக அயராது உழைத்த ஓர் போராளி. அவருக்கும் எனக்குமான உறவு மிக நீண்டது.அவரது பிள்ளைகள்மேல் அளவற்ற பாசத்தை கொண்டிருந்தார்.
அவர் தனது மக்களிற்கு இன்னும் பல சேவைகளை செய்ய வேண்டி இருந்தது.
ஆனால் தனது இளவயதில் தனது குடும்பத்தையும் தான் நேசித்த தோழர்களையும் மக்களையும் விட்டு விடைபெற்றுக்
கொண்டார்.
அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் எம்முடன் என்றென்றும் வாழும். மனதை கல்லாக்கி அவரை வழிஅனுப்பி வைக்கின்றோம்.
கருத்துகள் இல்லை