கவிதை - சுரேஷ் தர்மா!!
காதல்
ஒரு அழகிய மொழி
அது
அர்த்தங்களற்ற
பிதற்றல்.
காதலிக்காதவர்கள்
காய்க்காத
பூக்காத
மரத்தைப் போன்றவர்கள்.
காதலெனும் சோலையில்
கனி பறிக்கிறவர்கள்
வாழ்ந்து கடக்கிறார்கள்
வாழ்க்கையை.
காதல்
ஒரு அதிசய உலகம்
அங்கே
அன்பை போலவே
பொறாமையும் இருக்கும்.
அது
காதலில்
ஒரு படிநிலை.
காதலித்துப் பாருங்கள்
இதயம்
எடை குறைந்து போகும்...
இனிமை அதில்
குடிகொள்ளும்.
இரக்கம்
தானாக ஒட்டிக்கொள்ளும்.
அழகு அதிகரிக்கும்.
முத்தங்கள்
முழுமை பெறும்.
உணர்வுகள்
உயர்வு கொள்ளும்.
காதல்
யாவிலும்
யாவையும்
அழகாக்கும்...
சுரேஷ் தர்மா
கருத்துகள் இல்லை