ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகம் தெரிவு! 📸
சிவதாஸ் அண்ணா தலைமையில் ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகம் தெரிவு.
ஜொலிஸ்ரார் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் கடந்த 25/01/2025 சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னைய தலைவர் மணிவண்ணன் அண்ணா தலைமையில் ஆரம்பமாகிய கூட்டத்தில் புதிய தலைவராக சிவதாஸ் அண்ணாவும், செயலாளராக உமா அண்ணாவும், பொருளாளராக கௌதமன் அண்ணாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களோடு இரண்டு உபதலைவர்களும், பத்திராதிபர் ஒருவர் மற்றும் 5 உறுப்பினர்களை கொண்ட புதிய நிர்வாக குழு தெரிவு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை