யாழின் பல்வேறு பகுதிகளுக்கு டக்ளஸ் விஜயம் !
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கட்டமைப்பை மேலும் செழிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்டத்தின் பிரதேசங்கள் தோறும் நேரடியாக சென்று அதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் நேரடி விஜம் சென்றிருந்த செயலாளர் நாயகம், அப்பிதேசங்களின் செயற்பாடுகள் தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்திகொண்டபின்
கட்சியின் முக்கியஸ்தர்
இரா செல்வவடிவேல் மாஸ்ரர் வீட்டிற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன் அரியாலை மணியந்தோட்டம் பகுதிக்கும் சென்றிருந்த செயலாளர் நாயகம், அப்பிரதேசத்தின் நிலைமைகளை ஆராய்ந்தறிந்த நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த பிரதேசத்தின் வட்டார நிர்வாக செயலாளர் குகன் அவர்களின் தாயாரது நலன் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்திருந்தார்.
முன்பதாக வல்வெட்டித்துறை நகர, வல்வெட்டி வட்டார செயலாளர் பாக்கியராஜா அவர்களின் மைத்துனர் அமரர் பொன்னுத்துரை சக்திவேல் அவர்களின் 31 ஆம் நாள் நினைவு கூரல் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
குறித்த/நாள் விஜயத்தின் இறுதியாக மறைந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர் விஜயன் அவர்களது இல்லத்திற்கும் சென்று அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை