அரசியல் காழ்புணர்ச்சி அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக தவராசா சுட்டிக்காட்டு!
சில சமூக ஊடகங்களில் சில நாள்களாக வெளிவரும் செய்தி ஒன்று தொடர்பில்
தனது மகனை தொடர்பு படுத்தி திட்டமிட்ட வகையில் சேறு பூசப்படுவதானது தனது நற்பெயருக்கும் மகனின் சமூக பணிகளுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்திவருவதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் எஸ். தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடையம் குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் -
தமது சமூக ஊடகங்களின் பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக எவ்வாறு வேண்டுமானாலும் பதிவுகளை இடலாம் என்று செயற்படும் நிலையில் இருக்கின்றனர்.
அவர்களது இந்த செயற்பாடுகளால் பலரது கௌரவங்களும் நற்பெயரும் பாதிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலையே தற்போதும் எனக்கு ஏற்பட்டுள்ளது.
என்மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் சமூக ஊடங்களில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வாகிய எனது மகனின் பெயரை பயன்படுத்தி அவதூறு படுத்தும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதேவேளை எனது மகன் தற்போது இலங்கையில் செயற்பட்டுவரும் போதைபொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு அளிக்கும் அமைப்பு ஒன்றுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாதுகடந்த 2022 ஆம் ஆண்டு கேரளாவில் இடம்பெற்ற போதைபொருளுக்கு எதிரான மாநாட்டில் இலங்கையிலிருந்து சென்ற 2 பிரதிநிதிகளில் இவரது மகனும் ஒருவராக இருந்துள்ளார்.
தற்போதும் இவர் இலங்கையில் போதை பொருளுக்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபடுவதுடன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தபடுபவர்களுக்கு விரிவுரையாளராக செயற்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை