வறுத்த சுண்டல் செய்வது எப்படி.!
தேவையான பொருட்கள்
வெள்ளை சுண்டல்
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டு
சோம்பு
கடுகு
கடலைப்பருப்பு
கல்பாசி
மஞ்சள் தூள்
உப்பு
எண்ணெய்
தேங்காய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
ஒரு கப் வெள்ளை சுண்டலை எட்டு மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
ஊற வைத்துள்ள சுண்டலை குக்கரில் சேர்த்து அதனுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விடவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன், சிறிதளவு கல்பாசி சேர்த்து வதக்கவும்.
ஒரு கப் துருவிய தேங்காய் மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின், வேக வைத்துள்ள சுண்டலில் தண்ணீரை வடித்து விட்டு சேர்த்து இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
இறுதியாக, ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
#sujiaarthisamayal
கருத்துகள் இல்லை