கலாசாலையில் தைப்பொங்கல் விழா!📸

கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக் கவின் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா 22.01.2025 புதன் காலை கலாசாலையில் உள்ள சரஸ்வதி திருவுருவச் சிலை முன்றிலில் இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர் ஜெயக்குமாரி ஸ்ரீஸ்கந்தராஜா கலந்து கொண்டார்.  

கலாசாலையின் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர் ரஜிதா சின்னத்துரையை காப்பாளராக கொண்ட கவின் கலை மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். 

தேசியக்கொடியேற்றல் , கலாசாலை கொடி ஏற்றல் என்பவற்றைத் தொடர்ந்து திருக்குறள் வாழ்த்து இடம் பெற்றது.

 தொடர்ந்து சூரிய வழிபாட்டுடன் பொங்கல் பானை அடுப்பில் ஏற்றப்பட்டு பொங்கல் வைபவம் இடம்பெற்றது. 

இதன் போது கலாசாலையின் அதிபர் ச. லலீசன் , இந்து மன்றக் காப்பாளர் விரிவுரையாளர் கு . பாலசண்முகன் ஆகியோர் பொங்கல் தொடர்பான விளக்கங்களை மாணவர்களுக்கு வழங்கினர். 

நிகழ்வுகளை விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவர் இலகுநாதன் செந்தூர்ச்செல்வன் முன்னிலைப்டுத்தினார். 

மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் கவிதை, பாடல் , கும்மி நடனம் போன்ற கலையாற்றுகைகள் இடம்பெற்றன.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளர் ஜெயக்குமாரி ஸ்ரீஸ்கந்தராஜா கவின் கலை மன்றத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை கலாசாலையின் சிவன் ஆலயத்தில் இந்து மன்ற ஏற்பாட்டில் கடந்த 14.01.2025 செவ்வாய் பொங்கல் தினத்தன்று பொங்கல் வைபவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது ஆகும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.