சர்வதேச பயணிகளுக்கு செக்-இன் பேக்கேஜ் வரம்பு அதிகரிப்பு!!
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர்_இந்தியா_எக்ஸ்பிரஸ் சர்வதேச பயணிகளுக்கு செக்-இன் பேக்கேஜ் வரம்பை உயர்த்தி உள்ளதாக நேற்று விளம்பரங்கள் மூலம் அறிவித்துள்ளன.
அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு, 30 கிலோ செக்-இன் பேக்கேஜ் வழங்கப்பட்டது. அது சமீபத்தில் 20 கிலோவாக குறைக்கப்பட்டு இருந்தன. இதை மீண்டும் 30 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுடன் செல்லும் பயணிகள் 30+10 கிலோ வரை கொண்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, சர்வதேச வர்த்தக பயணிகளுக்கு, 40 கிலோ வரை செக்-இன் பேக்கேஜ் கொண்டு செல்லலாம். கேபின் பேக் பொறுத்தவரை, இரண்டு பேக் வரை கொண்டு செல்லலாம். ஆனால், எடை 7 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு வாரம் 450 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய மூன்று நகரங்களுக்கும் வாரம் 26 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை