பருத்திதுறை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்போம்!


பருத்தித்துறையில் 14 வயது பாடசாலை மாணவன் ஊசிமூலம் போதைப்பொருளை கையில் நாளத்தினூடாக ஏற்றி பாவித்துள்ளான் . கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை அவனது வயது கூடிய நண்பர்கள் பாவிக்கும் போது தானும் பாவித்துள்ளதாக கூறியுள்ளான்.அவர்கள் ஒரே ஊசியின் மூலம் அனைவரும் போதைமருந்து ஏற்றி உள்ளனர். இவ்வாறு வடமராட்சியில் பல மாணவர்களும் பாதிக்கப்பட்டு இருப்பது அறியப்பட்டுள்ளது . எனவே பெற்றோர்கள் ஆசிரியர்கள் இது தொடர்பாக சிகிச்சை அளிக்க உதவி தேவைப்படின் வைத்தியசாலையை நாடலாம். 

OPD , உளவளத்துணை பிரிவினை நாடவும்.


இதே போன்று பலர் போதைப்பொருட்களுக்கு அடிமையாக உள்ளார்கள் அவர்கள் இந்தப்பழக்கங்களில் இருந்து விடுபட நாம் உதவ தயாராக உள்ளோம் .நீங்கள் Base Hospital Point Pedro பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை OPD இனுடாக சிகிச்சை பெறலாம். உள ரீதியான ஆலோசனை , மீண்டும் ஆரோக்கிய வாழ்வழித்தல் என்பன வழங்கப்படும்.

உங்கள் தகவல்கள் பெயர் விவரங்கள் ஒரு போதும் வெளியிடப்படமாட்டாது. இரகசியங்கள் பேணப்படும்.


- Pointpedro Base Hospital

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.