எங்கள் ராஜ்மோகன் அண்ணாவுக்கு வீரவணக்கம்!!

 


ஆண்டுகள் பல கடந்தாலும் எம் உள்ளத்தில் அழியாது வாழ்பவர்கள் எங்கள் மாவீர தெய்வங்கள். நம் உயிர் காக்க தம்முயிர் ஈந்த மகா உத்தமர்கள்.  இனத்தை நேசித்து அதற்காக ஆகுதியாகிய இரண்டாம் கடவுளர்கள். 

அத்தகையதொரு மாவீரனின் நினைவுப்பகிர்வு இது.


ஆண்டுகள் 41 கடந்துள்ளது ஆனாலும் எங்கள் ராஜ்மோகன் அண்ணாவின் நினைவுகள் எம் நெஞ்சங்களில் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. மறைந்தும் மறையாத வீர விருட்சங்களில் எங்கள் ராஜ்மோகன் அண்ணாவும் ஒருவர். 


வீர வரலாற்றின் சான்றாக  1984ம் ஆண்டு தை மாதம் 20ம் திகதி நெல்லியடியில் தமிழீழ விடியலுக்காக தன் இன்னுயிரை ஈகம் செய்தார் எங்கள் ராஜ்மோகன் அண்ணா.


1983 ம் ஆண்டு யூலையில் கொழும்பில் நிகழ்ந்த தமிழ் இனவழிப்பின் பின் தமிழ் இளைஞர்கள் 'தமிழருக்கு தமிழீழமே தீர்வு' என உறுதியான முடிவினை எடுத்தனர். அக்காலத்தில் பல விடுதலை இயக்கங்கள் உருவாகியிருந்தது.  ஆரம்பத்தில் இருந்தே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் 'தமிழீழ விடுதலை' என்ற இலட்சியத்தில் உறுதி யாக இருந்தது. 


 காலத்தின் தேவைகருதி  தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை விளக்க துண்டுப்பிரசுரத்தை எம் மக்களுக்கு  விநியோகம் செய்தபோது ஆயுதம் ஏந்திய சிங்கள பொலிசார் இவர்களை முற்றுகையிட்டனர். அவர்களிடம் உயிருடன் அகப்படகூடாதுஇ  என்ற நோக்கத்தில் எதிரிக்ளுக்கு சவால் விட்டு முற்றுகையை உடைத்து வெளியேற முற்பட்டபோது சிங்கள கூலிப் படைகளின் துப்பாக்கிச் சன்னங்கள் அண்ணாவின் உடலைத் துளைத்தன. 


இனமானம் காக்கப்புறப்பட்ட விடுதலைப்போரில் எங்கள் வீரத்திருமகன் தமிழீழ மண்ணை முத்தமுட்டான். 


அண்ணா...உங்கள் இலட்சியத்தை அடையும்வரை நாம் தொடர்ந்து பயணிப்போம். 


ஓ.. வீரனே எங்கள் மண்ணில் உனது பெயர் எழுதி வைக்கப்படும்.


வீர மரணமாகி தும்பளையூருக்குள் உன் வித்துடல் வந்த தருணம் முதல் முதலாக தும்பளை ஊரே கண்ணீரில் உறைந்து போனதை இன்றும் என் கண் முன்னே காணமுடிகிறது. 


நிரந்தரமாக காணாமல் வீர மரணமாகி விடுவாய் என்று நினைக்கவில்லை. என்றும் உனது வீரமரண நினைவுகளோடு உறவுகளும் ஊரவர்களும்.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


இரா. சிவா


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.