தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்ற முயலும் டக்ளஸ் !


தையிட்டி விகாரையை அகற்றுவதற்கு ஆதரவு என்று தமிழ் மக்களை ஏமாற்றும் இன்னொரு அறிவிப்பை டக்ளஸ் வெளியிட்டுள்ளார். 


கடந்த காலத்தில் ஸ்ரீதர் தியேட்டர் உட்பட தமிழர்களின் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி அபகரித்து இன்னமும் திருப்பி ஒப்படைக்க மறுத்து வரும் டக்ளஸ் இவருடைய ஏமாற்றும் செயல்களை மக்கள் இனம் கண்டு மக்களால் கடந்த தேர்தலில் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் இப்போது தனியார் காணிகளை அபகரித்து கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுவதற்கு ஆதரவு என்று தெரிவித்துள்ளார். 


கடந்த காலத்தில் இவர் ஆதரவளித்த இனவாத அரசாங்கத்தினாலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டது என்பதும் அப்போது தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் பொருட்படுத்தாமல் விகாரை கட்டப்டுவதை அனுமதித்து சிங்கள அரசாங்கத்திடம் பெறக்கூடிய அனைத்து அனுகூலங்களையும் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதேவேளை தல்செவன உட்பட ஆயுதப்படையினாரால் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்கள் தொடர்பாக இவர் ஒருபோதும் குரல் எழுப்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

எழுபது வயதை அண்மித்துள்ள டக்ளஸ் திருந்தி ஸ்ரீதர் தியேட்டர் உட்பட இவரால் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்களை மீள கையளித்து பட்டினத்தார் கூறிய "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே " என்ற உண்மையை உணர்ந்து இனியாவது போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


நன்றி 

Dr முரளி வல்லிபுரநாதன் 

12.2.2025

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.