பன்றிகளு வைரஸ் தொற்று - பல இலட்சத்தை இழந்த கிளிநொச்சி வாசி! 📸

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் பன்றி பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் வைரஸ் தாக்கம் இறந்து விட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார். 


பல இலட்சங்கள் முதலீடு செய்து பன்றி பண்ணையை நடாத்தி வந்த நிலையில் தற்போது நாடாளவிய ரீதியில் பரவி வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக தங்கள் பண்ணையில் உள்ள அனைத்து பன்றிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர் இதன் மூலம் ரூ. 75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


தன்னுடைய பண்ணையில் உள்ள 150 வரையான பெரிய பன்றிகளும், 100 இற்கு மேற்பட்ட பன்றி குட்டிகளும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.