சிவப்பரிசிக் கஞ்சி செய்வது எப்படி.!


தேவயான பொருட்கள்.

சிவப்பரிசி - 100 கிராம் பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி அளவு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.


செய்முறை: வெறும் வாணலியில் சிவப்பரிசியை லேசாக வறுத்தெடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சன்ன ரவையாக உடைத்தெடுக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் தேங்காய் எண்ணெய்விட்டு வெந்தயம், சீரகம் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் அரிசி ரவை, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


குறிப்பு: விரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம். .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.