அமெரிக்கா இந்தியாவுக்காக இயங்குகின்றது!
பாரத பிரதமர் மோடி அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பரை சந்தித்தபின் வெளியான கூட்டறிக்கை உலக கவனத்தை பெற்றிருகின்றது.
மோடி மிக கவனமாக அமெரிக்க உறவை கையாள்கின்றார், அதாவது பசிபிக் கடலில் சீன ஆதிக்கத்துக்கு எதிரான நகர்வு, இந்திய பொருளாதாரத்தின் முக்கிய காரணியான எரிபொருள் விவகாரம் என இந்தியாவின் நலன்களை விட்டு கொடுக்காமல் நல்ல முடிவுக்கு அமெரிக்காவினை இழுத்துள்ளார்
இதன் உள்ளார்ந்த அர்த்தம் ரஷ்யாவுடனான மலிவு விலை எண்ணெயினை எளிதில் விடமாட்டோம், அப்படி ஒரு சூழல் உலகளவில் வந்தால் மாற்று ஏற்பாடுகளை அமெரிக்கா செய்தாக வேண்டும் என்ன நடந்தாலும் எங்கள் பொருளாதார நலனை விட்டு கொடுக்கமாட்டோம் என்ற நகர்வு அது
அமெரிக்காவும் இதனை ஆமோதித்திருக்கின்றது, நிச்சயம் இது மோடியின் வெற்றி
இதர விஷயங்கள் பரஸ்பரமாக பேசபட்டிருக்கின்றன, அமெரிக்காவுக்கு சில சலுகைகளை இந்தியா வழங்க அமெரிக்காவோ பெரிய பெரிய விஷயங்களை தர முன்வந்திருக்கின்றது
மோடியின் மிகபெரிய வெற்றி மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ராணாவினை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்திருப்பது
முன்பெல்லாம் அமெரிக்கா பாகிஸ்தானை தூண்டிவிட்டு இந்தியா சிக்கி தவிப்பதை ரசிக்கும், அப்படித்தான் இந்த சதிகாரனை வைத்து பாதுகாத்தார்கள், இங்கே சில வில்லங்கமான சர்வதேச அரசியலும் உண்டு
இப்போது ராணா எனும் பாகிஸ்தானிய தீவிரவாதியினைதருவோம் என டிரம்பர் சொல்லிவிட்டார், இனி ராணா இந்தியா கொண்டுவரபடுவான்
இதனால் இனி இந்தியாவுக்கு எதிராக குற்றம் செய்வோர் அமெரிக்காவில் பதுங்கமுடியாது, காலிஸ்தான் போன்ற கோஷ்டிகள் இனி அடங்கும்
மோடி பயணத்தின் இன்னொரு வெற்றி எப் 35 விமானங்களை இந்தியாவுக்கு தருவோம் என டிரம்பர் சொல்லியிருப்பது
இது நிச்சயம் பெரும் வெற்றி, இன்றைய உலகின் ஆகசிறந்த போர்விமானம் ஸ்டெல்த் எனும் ரேடாரில் சிக்காத விமானம் எல்லா வகையிலும் பலமான விமானத்தை தருவோம் என அமெரிக்கா சொல்வது பெரும் திருப்பம்
பொதுவாக ஐரோப்பா, இஸ்ரேல் தாண்டி இதை அமெரிக்கா யாருக்கும் கொடுக்காது. அதுவும் ரஷ்ய எஸ் 400 சிஸ்டம் இருக்கும் நாட்டுக்கு தராது, நேட்டோவில் இருந்தாலும் துருக்கிக்கே அவ்விமானம் கொடுக்கபடவில்லை
உண்மையில் இந்திய விமானப்படை விமான பற்றாக்குறையில் உள்ளது, பழைய ரஷ்ய விமானங்களை களைந்துவிட்டு புதிய விமானங்களை அவசரமாக இணைக்கும் வேகத்தில் இருக்கின்றது
இங்கு எப் 35 என்பது அவசியம், ஆனால் இது மிக நவீன விமானம் , பொது மேடையாக நின்று ஏகபட்ட விமானங்களை தொடர்பு கொண்டு வானில் நின்று அட்டகாசமான தாக்குதலை செய்யும் விமானம்
இந்திய விமானபடையில் பெரும்பாலும் ரஷ்ய விமானம் என்பதால் இங்கு தொழில்நுட்பம் இணைவதில் சிக்கல்வரும், இதனை மெல்ல மெல்ல சரி செய்யவேண்டும் அல்லது கூடுதல் அமெரிக்க தொழில்நுட்ப விமானம் வேண்டும்
எப்படியோ இந்திய ராணுவம் முழுக்க ரஷ்ய பிடியில் இருந்து வெளிவந்திருப்பது தெரிகின்றது, சீனாவிடம் இந்தியாவிடம் ஒரே ரஷ்ய பாணி ஆயுதம் இருக்கும்போது அது நல்லதல்ல
இனி இந்தியாவின் கை மேலோங்கும்
நாட்டுக்கு மிக மிக அவசியமான முக்கியமான நம்பமுடியா அதிசயங்களை செய்திருக்கின்றார் மோடி
முன்பெல்லாம் ஒரு குற்றவாளியினை பெறமுடியாது, 1990களில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எப்16 கொடுக்கும் போது இந்தியா பெரும் வலியினை கண்டது
இப்போது காட்சிகள் மாறிவிட்டன, அமெரிக்கா இந்தியாவுக்காக இயங்குகின்றது
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு மாதிரியான தேசங்கள், அவர்களோடு நட்பு பாராட்டினால் நம்பிக்கையாய் வாழ வைப்பார்கள், ஆனால் எதிர்த்தால் எப்படி குழப்பவேண்டுமோ அப்படிகுழப்புவார்கள்
காங்கிரஸ் இவர்கள் எதிர்ப்பு அரசியல் செய்து தானும் அழிந்து தேசத்தையும் அழித்தது, மோடி அரசு தேசத்தை காப்பாற்றுகின்றது
உலக அரசியல் கணிப்புபடி அமெரிக்க அதிபர் முதலில் யாரை சந்திகின்றாரோ அவர்கள்தான் இந்த அரசின் முக்கிய கூட்டாளி என அர்த்தம், அதன்படி இந்தியாவின் தேவை அமெரிக்காவுக்கு அதிகமாகின்றது
இனி இந்தியா ஐ.நா நிரந்தர அந்தஸ்து நாடாக நிச்சயம் உயர்வு பெறும், சில மாதங்களில் அது நடக்கும்
உலக அரங்கில் இரண்டாம் வலிமையான தேசம் என பெரும் இடத்தை நோக்கி இந்தியா நகர்கின்றது, மோடி அந்த அதிசயத்தை செய்கின்றார் என்பதை காணமுடிகின்றது
இது மோடியால் சாத்தியம், அவரை ஆதரிக்கும் இந்த பெரும் தேசத்தால் சாத்தியம்
இந்தியாவுக்கு குறைந்தது இன்னும் 15 ஆண்டுகளாவது மோடி பிரதமராக இருத்தல் அவசியம், தேசம் வளர தொடங்கியிருக்கின்றது, உலக அரங்கில் மேலெழுகின்றது
இன்னும் இன்னும் அது பெரும் இடம் அடைய மோடி நிரந்தர பாரத பிரதமராய் இருத்தல் அவசியம், தேசம் அதை நிச்சயம் செய்தல் வேண்டும்
"பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.
ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு
தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு
நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு
வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு
யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு -
ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு -
தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு"
என பாரதி கனவு கண்ட பெரும் வலிமையான தேசத்தை மோடி உருவாக்கிவிட்டார், காசிநாதன் அவருக்கு எல்லா வளமும் ஆரோக்கியமும் நல்ல காலமும் கொடுத்து கொண்டே இருக்கட்டும்
கருத்துகள் இல்லை