சிவராத்திரியை முன்னிட்டு பாடசாலைகள் விடுமுறை!
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி அதற்கான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை