ஜெய ஜெய சங்கர!!!
தொட்டு விட்டோம் உம் பாதமதை தூயவனே
ஶ்ரீ சங்கரா!!
விட்டிடாதே நீயும் எங்களை வேறு துணை யாருமில்லை!
பட்டமரம் துளிர் விடுமே உம் பார்வை பட்ட அக்கணமே!
இட்டமுடன் எங்களை காண்பாய்
எங்கள் குறையும் தீர்ந்திடுமே!
அட்டமா சித்தி கேளோம்,
ஐந்தறிவு நிலை கேளோம்,
கொட்டுமாறு செல்வம் கேளோம்,
கொடுக்குமாறு எங்களை வைப்பாய்!
தட்டிக்கழியும் தடங்கல்களை உங்கள் பார்வையால் துடைத்தெறிவாய்!
நஷ்டம் ஏதும் வாராது நாங்கள் நடத்தும்
நற் தொழிலில் தொட்டவைகள் துலங்கச்செய் தொழுகின்றோம் வளர்த்திடுவாய்!
குட்டியெங்களை நேர்படுத்தி குறையிலாது சீர்படுத்தி மொட்ட அவிழ்ந்த புன்னகையால் மொத்த வினை அழித்திடுவாய்!
கட்டி எங்களை அணைத்திடுவாய் கற்பனையில் மிதத்திடுவாய்!
எட்டிடாத செந்தமிழை எங்களுக்குள் நீர் புகுத்திடுவாய்!
நடமாடும் தெய்வமே சங்கரா சேவகனாய் எங்களை ஏற்றுக்கொள்வாய்!
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!
கருத்துகள் இல்லை