வவுனியாவில் அதிசய மரம்!📸
வவுனியாவில் சந்தேகத்தை கிளறும், அதிசய மரம் ஒன்று உள்ளதாக சொல்கிறார்கள்,
இதன் மகிமை பற்றி பலருக்கும் தெரியாதுள்ளதாக கூறுகின்றனர்.
இது கிட்டத்தட்ட ஐநூறு அல்லது ஆயிரம் வருடங்கள் பழமையானதொரு மரமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இது வேப்பமரத்தை சார்ந்த ஒரு இனமாக உள்ளது. ஆனாலும் இதன் அடிப்பாகம் இலுப்பை மரத்தை ஒத்ததாக காட்சியளிக்கின்றது.
இதன் பருத்த அடிமரமானது சந்தேகத்தை கிளறும் விதமாக அமைந்துள்ளது.
இதன் அடியிலே பலகோடி ரூபா பெறுமதியான முத்துக்கள் விளைந்து இருக்கலாம் எனவும் ஒருசில கிராம வாசிகளால் நம்பப்படுகிறது.
இம்மரம் வவுனியா கச்சேரி வளாகத்திலே அமையப்பெற்றுள்ளது.
இதன் ரகசியத் தன்மையை இதுவரை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றும் சில வயோதிகர்கள் கூறுகிறார்கள்.
இதனை ஆய்வுக்கு உட்படுத்தினால் தான் இதன் உண்மை வயதை கண்டுபிடிக்கலாம் என விசயமறிந்தவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
இதன் உண்மைத்தன்மையை யார்தான் வெளிப்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை