யாழ். இந்துக்கல்லூரி பின்னடைவு!
ஹிக்கடுவ, ஸ்ரீ சுமங்கல கல்லூரிக்கு எதிரான பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு மூன்று ஏ நிலை அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம், இந்துக் கல்லூரி முதல் இன்னிங்ஸில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மொரட்டுவை மகாவித்தியால மைதானத்தில் நேற்று (20) ஆரம்பமான இரண்டு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட யாழ்ப்பாணம், இந்துக் கல்லூரி அணி 40.3 ஓவர்களில் 101 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. மத்திய வரிசையில் விமலதாஸ் விதூசன் அதிகபட்சமாக 43 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஸ்ரீ சுமங்கல கல்லூரி அணி சிறப்பாக செயற்பட்டு முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 57 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களை பெற்றது. ரணசர தேசான் 141 பந்துகளில் 109 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது தொடர்ந்து களத்தில் உள்ளார். சுரேன் நிகேஷர 54 ஓட்டங்களை குவித்தார்.
இதன்போது பந்துவீச்சில் தனராஜா ரஷூன் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இன்று போட்டியின் இரண்டாவது மற்றும் கடைசி நாளாகும்.
கருத்துகள் இல்லை