மற்றொரு நியூசி. வீராங்கனை இல்லை!
இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து நியூசிலாந்து மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொல்லி பென்போல்ட் உபாதை காரணமாக விலகியுள்ளார்.
ஹலிபர்டன் ஜோன்ஸ்டன் கேடய தொடரில் ஆடியபோதே 23 வயது பென்போல்டின் இடது முழங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சத்திரசிகிச்சையை எதிர்கொள்ளவிருப்பதோடு அதில் இருந்து மீண்டு வருவதற்கு 12 வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்போல்ட் நியூசிலாந்து மகளிர் அணிக்காக இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் 10 டி20 போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அண்மைக் காலத்தில் அவர் பந்துவீச்சில் சோபித்து வரும் நிலையிலேயே உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
ஏற்கனவே இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து நியூசிலாந்து அணித் தலைவி சொபி டிவைன் விலகி இருக்கும் நிலையில் பென்போல்டும் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணி அங்கு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆடவுள்ளது.
கருத்துகள் இல்லை