ரம்பின் திட்டம் என்ன!!
வரிகளின் ஊடு கனடாவிற்குள் குழப்பம் விளைவிக்கும் ரம்பின் திட்டம் குறித்த ஒரு பார்வை.
அமெரிக்காவிற்கு கனடாவில் இருந்து ஏற்றப்படும் பொருட்களுக்கு பெப்பிரவரி 1 இல் இருந்து 25% வரி என்று ரம் பொதுவாகச் சொன்னாலும் அது அவ்வாறு இறுதி அறிவிப்பில் அமையாது என்றும் தனக்குத் தேவையானதில் விட்டுக் கொடுப்பைக் கொடுத்து தேவையற்றதில் 25% வரி இருக்கும் எனவும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரம்ப்பின் வரி அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பதிதிரிகைச் செய்தி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன்,
கனடாவில் இருந்து 4 மில்லியன் பரல் எண்ணெய் அமெரிக்காவிற்குத் தினமும் செல்கிறது. அமெரிக்கா அதிகம் எண்ணெய் வாங்கும் முதல் நாடும் கனடா தான்.
இங்கு பெறப்படும் எண்ணெய் கனடாவிற்கு அருகில் உள்ள மாநிலங்களில் குறைந்த விலைக்கு வாங்குவதற்கு வழிகோலுகின்றது. அப்படி இருக்க இந்த எண்ணெய்க்கான வரி அதிகரிப்பை அந்த மக்கள் உடனேயே உணர்வார்கள் என்பதும் அவர்களுடைய வாக்குகளை வைத்து பதவிக்கு வந்த ரம்ப் இவ்விடயத்தில் யோசித்தே செயற்படுவார் எனவும் அதனால் இந்த எண்ணெய்க்கான வரி 10% ஆக இருக்கலாம் எனவும் மக்களால் கருத்து கூறப்பட்டது.
.கனடாவின் எண்ணெய் மாநிலமான அல்பேட்டாவில் தற்போது ரம் போன்ற வலதுசாரி அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் நண்பர்கள் என்பதோடு பதவியேற்பிற்கு முன்னர் ரம்ப் அல்பேட்டா மேயரை அழைத்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடா - அமெரிக்கா வர்த்தகப் போரில் கனடா ஒரு முடிவோடு இருப்பதை ரம்ப் அல்பேட்டா அம்மணியைக் கொண்டு தடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இது நாட்டிற்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற யோசனையுடன். இதைப் போன்று ஜரோப்பிய தென் அமெரிக்கா போன்றவற்றிலும் உள்ளக குழப்பங்கள் ஏற்படலாம் எனவும் அதற்கான தயார்ப்படுத்தல்களை தயார்ப்படுத்தியிருப்பதாகவும் கருத்துகள் பலவாறாக வெளிவருகின்றன.
இது நாடுகளின் பரிபாலன நடைமுறைகள் அல்ல தெருச்சண்டை.
களம் தயார்
விரைவில் ஆட்டம் ஆரம்பிக்கும்.
உலக அரங்கில் ஆரம்பமாகவுள்ள இந்த பூடகச்சரைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
பகிர்வு
கருத்துகள் இல்லை