ஏர் நிலம்” தொண்டமைப்பு நடாத்திய மூத்த உழைப்பாளர் மதிப்பளிப்பு நிகழ்வு!!



ஏர்நிலம் தொண்டமைப்பினரின்,  "மூத்த உழைப்பாளர்களுக்கான மதிப்பளிப்பு" நிகழ்வானது மன்னார் மாவட்டத்தில் அடம்பன் பிரதேச மாளிகைத்திடல் பிள்ளையார் ஆலய வளாகத்தில் 15.02.2025 அன்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தாயகத்தில் “ஏர் நிலம்” தொண்டமைப்பு தனது சமுக செயற்பாடுகளின் ஓர் அங்கமாக மூத்த உழைப்பாளர்களை மதிப்பளிக்கும் மேன்மைமிகு செயற்திட்டத்தினை வருடந்தோறும் மேற்கொண்டு வருகின்றது.

கடந்த நான்கு(04)ஆண்டுகளாக இச் செயற்திட்டத்தை ஏர் நிலம் தொண்டமைப்பு நடாத்தி வருகின்றது அதன் தொடராக இவ் ஆண்டு 2025இல் 

இவ் நிகழ்வானது “ஏர் நிலம்”தொண்டமைப்பின் களத்துக்கும் புலத்துக்குமான இணைப்பாளர் கவிஞர் மன்னார் பெனில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 இவ் மதிப்பளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக 

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் .திரு. சிறிஸ்கந்தகுமார் அவர்களும் மாந்தை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திரு.ச.டிலக்ஸ்சன் அவர்களும்  மத குருமார் மற்றும் கிராம உத்தியோகத்தர் திருமதி .லினற் சந்தயோகு அவர்களும் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.பிரியந்தன் அவர்களும் மாளிகைத்திடல் சமுக மட்ட அமைப்புக்களும் இணைந்து இவ் மதிப்பளிப்பு நிகழ்வை சிறப்பித்தனர்.


 மூத்த கலைஞர் கலாபூஷணம் மாசிலாமணி அவர்களின் குழுவினரின் பாரம்பரிய இசையோடு கவிபாடி கோலாட்டத்தோடு மதிப்பாளர்களும் விருந்தினர்களும் மகிழ்வோடு  அழைத்துவரப்பட்டதோடு திருக்கேதீஸ்வர அறநெறி பாடசாலை மாணவர்கள் தமிழ் பாரம்பரிய கலாசார வேடம் புணைந்து பவனியாக அழைத்து வந்தமை சிறப்பம்சமாகும்.


பொங்கல் பானையிலே மூத்த உழைப்பாளர்களுடன் பிரதம விருந்தினர்களும் அரிசியை உலையிட்டு நிகழ்வு சம்பிரதாயமாக ஆரம்பமானது.

 மங்கள சுடரேற்றி அரங்க நிகழ்ச்சிகள்  அகவணக்கத்தோடு  தொடர்ந்து குறளிசையும் ஓதப்பட்டது.

 

ஏர் நிலத்தின் ஆலோசகர் திருமதி.சூரியகுமாரி அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

 தொடர்ந்து திருக்கேதீஸ்வர அறநெறி மாணவியால் சிறப்பான வரவேற்பு நடனமும் தொடர்ந்து 

     தலைமை உரையினை ஏர் நிலம் தொண்டமைப்பின் களத்துக்கும் புலத்துக்குமான இணைப்பளர் கவிஞர் மன்னார் பெனில் அவர்கள் ஏர் நிலம் தொண்டமைப்பின் மிக சிறந்த செயற்பாடாக மூத்த உழைப்பாளர்கள் மதிப்பு நிகழ்வானது கடந்தகாலங்களில்  முன்னெடுக்கப்பட்டதோடு 2025ஆம் ஆண்டு  மன்னார் மாவட்டத்தில் நிகழ்த்தப்படுவது பெருமைக்குரியது எனவும் இது காலத்தின் தேவை எனவும் முதியோர் தின விழா மட்டுமே தற்காலத்தில் கொண்டாடப் படுவதாகவும் இதுபோன்று மூத்த உழைப்பாளர்கள் மதிப்பளிக்க படவேண்டும் எனவும் தலைமை உரையில் குறிப்பிட்டார்.


 கெளரவ விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அடம்பன் பிரதேச உதவி பிரதேச செயலாளர் ,மற்றும் அருட்தந்தை போன்றோர் "ஏர் நிலம்' தொண்டமைப்பின் மூத்த உழைப்பாளர்கள் மதிப்பளிப்பு  செயற்பாடு   அவசியமும் வரவேற்க தக்கதும் எனவும் கருத்துரைகளில் கூறியதோடு மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் ஏர் நிலம் அமைப்பின் ஏனைய செயற்பாடுகளையும் அறிந்த கொண்டதாகவும் ஏர் நிலம் அமைப்பின் நிறுவுனர் மற்றும் செயலாற்றுனர்கள் யாவருக்கும் சிறப்பான வாழ்த்துக்களை கூறினார்.


உதவி பிரதேச செயலாளர் அவர்கள் கூறுகையில் இவ்வாறான செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் முதியவர்களை முதியோர் இல்லங்களில் தவிக்க விடுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் உழைப்பு எமது சமுகத்துக்கும் நாட்டுக்கும் பயன்படுகின்றது என்றும் விழித்துக் கூறியதோடு  பல்கலைக்கழகம் செல்லும் நிதி வசதி அற்ற மாணவர்களுக்கும் ஏர் நிலம் ஊடாக உதவி கிடைக்கப்பெற வேண்டும் என்றும் தனது உரையில் கூறினார்.

அருட்தந்தை சீமான் அடிகளார் கூறுகையில் இவ்வாறான நிகழ்வுகளை ஆவணமாக தொகுக்க வேண்டியதும் ஏர் நிலத்தின் செயற்பாடாக எதிர்காலத்தில் அமையவேண்டும் எனவும் கூறினார்.


கவிஞர் யோ.புரட்சி அவர்கள் சிறப்புரையினை ஆற்றினார் அவர் தனதுரையில் ஏர் நிலம் தொண்டமைப்பின் ஆரம்பம் அதன் ஆரம்ப செயற்படுகள் மற்றும் ஏர் நிலம் என பெயர் கூட்டியதன் நோக்கம் ஏர் நிலத்தின் பணி தொடர்பாக  முழுமையான பார்வையை தனது உரையில் கூறியிருந்தார்.


மன்னார் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18 மூத்த உழைப்பாளர்களை தெரிவு செய்து அவர்களை அரங்கில் மதிப்பளித்து கெளரவித்ததும் குறிப்பிடத்தக்கது


ஏர் நிலம் அமைப்பின் இச் செயற்

திட்டத்திற்கு பிரதான நிதியாளர்களாக புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுகளான திரு.ஆறுமுகம் மேகன் கனடா, திரு.செல்லன் தயாபரன் ஜேர்மன், திரு . நமச்சிவாயம் இராமச்சந்திரன் சுவிற்சர்லாந்து,

திரு.துரைராசா லிங்கேஸ்வரன் சுவிற்சர்லாந்து ஆகியோர் இணைந்து ஆண்டுதோறும் பலம் சேர்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.



























கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.