கர்ப்பிணிகள் குழந்தைகள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்!!
இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சவால்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் 2019ம் ஆண்டு 341,745 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் 319,010 குழந்தைகள் பிறந்துள்ளன. எனினும், புதிதாகப் பிறந்த குழந்தைகளில் அனைத்தும் ஆரோக்கியமற்றவர்கள் என்று சமூக மருத்துவர்கள் கல்லூரி தெரிவித்துள்ளது.
பிரதானமாக, 1,600 குழந்தைகள் 28 வாரங்களுக்கு முன்னர் கருப்பையிலேயே இறந்துள்ளன. பிறந்த குழந்தைகளில் 35% பேர் பிறவி குறைபாடுகளுக்குக் உள்ளாகியிருந்தனர்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் 4,000 முதல் 5,000 குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறந்துள்ளன என்றும், 900 முதல் 1,000 குழந்தைகள் பிறந்த பிறகு ஒரு வயதுக்குள் இறந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக மருத்துவர் கபில ஜயரத்ன அவர்களின் கூறியபடி,
இந்த குறைபாடுகளுக்கு முக்கிய காரணமாக மரபணு பிரச்சினைகள், சுற்றுச்சூழல் காரணிகள், இரசாயனங்கள் மற்றும் கதிர்வீச்சு போன்றவை காரணங்களாக உள்ளன. இலங்கையில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 2019ல் 319,000 என்ற எண்ணிக்கையில் இருந்த குழந்தைகள்பிறப்பானது.
2023இல் அது 247,900 ஆக குறைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
குறைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இயல்பாக வாழ்ந்தாலும், சிலர் பிறந்தவுடன் 24 மணி நேரத்திலேயே இறந்து போகின்றனர் என தெரிவித்தள்ளது.
2023ல் 453 குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிட்டன, மேலும் பிறந்த பிறகு 2 முதல் 7 நாட்களுக்குள் 951 குழந்தைகள் இறந்துவிட்டன. 8 முதல் 28 நாட்கள் கழித்து 527 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்த நிலைமை, நாட்டின் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தில் மேலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை காட்டுவதாய் அமைந்துள்ளது
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை