எலுமிச்சை ரசம் செய்வது எப்படி!


தேவையான பொருட்கள்


 📌¼ கப் துவரம் பருப்பு 

📌2 தக்காளி நறுக்கியது 

📌¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் 

📌¼ டீஸ்பூன் எண்ணெய் 

📌1 டீஸ்பூன் மிளகு 

📌½ டீஸ்பூன் சீரகம் 

📌1 இஞ்சி இரண்டாக நறுக்கியது தாளிக்க: 

📌1 டீஸ்பூன் எண்ணெய் 

📌1 டீஸ்பூன் கடுகு 

📌¼ டீஸ்பூன் சீரகம் 

📌கருவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கியது கொஞ்சம்

📌1 டீஸ்பூன் சாம்பார் பொடி அல்லது ரசம் பொடி 

📌¼ டீஸ்பூன் பெருங்காய பொடி 

📌உப்பு தேவையான அளவு 

📌1 பச்சை மிளகாய் கீறியது 

📌2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழ சாறு 

📌¼ டீஸ்பூன் நெய் தேவைப்பட்டால் 


செய்முறை:


📌முதலில் பருப்பை நன்கு கழுவி ஒரு குக்கரில் சேர்த்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், ¼ டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் 3 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும். 


📌அடுத்து பருப்பு வேகும் சமயத்தில் உரலில் மிளகு, இஞ்சி, சீரகம்,சேர்த்து ஒன்றும் பாதியுமாக இடித்துக்கொள்ளவும். 


📌பிறகு பருப்பு வெந்ததும் தக்காளி மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும், பிறகு பருப்பை மத்து வைத்து கடைந்துகொள்ளவும். 


📌அடுத்து தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை இதில் சேர்த்து அத்துடன் கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கிவிடவும். 


📌வதங்கியதும் வேக வைத்த பருப்பு, மற்றும் தக்காளி சேர்த்து அதில் ரசப்பொடி, பெருங்காயப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2½ கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். 


📌5 நிமிடம் கழித்து நூறை கட்டியதும் அடுப்பை நிறுத்தவும். 


📌இனொரு பாத்திரத்தில் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு அதில் எலுமிச்சை சாறு ஊற்றி உடனே கொதிக்க வைத்த ரசத்தை இதில் ஊற்றவும். 


📌இப்பொழுது சுவையான எலுமிச்சை ரசம் தயார்.......



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.