வலம்புரி சங்குநாதம் ஆலடி மாநாடு சித்த மருத்துவத் துறையை ஆங்கில மயமாக்குவதா?


வாத்தியார் வைத் திலிங்கம் தலைமை யில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனை வரும் ஆலடிக்கு வந் திருந்தனர்.


இறைவணக்கத்து டன் ஆலடி மாநா ட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்து நின்று இறை வணக்கம் செலுத்தி அமர்ந்தனர்.


தொடர்ந்து ஆலடி யில் அமைதி நில வியது. அமைதி யைக் குலைக்க விதா னையார் விசுவலிங் கம் குரல் கொடுத்தார்.


விதனையார்: இனி எங்கட சித்த மருத்துவத் துறையும் எங்களிட்ட இருந்து பறிபோகும் போல, மூப்பர்:- என்ன விதானையார் சொல் லுறியள்.


விதானையார்:

யாழ்ப்பாணப் பல் கலைக்கழக சித்த மருத்துவத்துறையை ஆங்கில மொழிக்கு மாற்ற வேணும் எண்ட கோரிக்கை வலுத்து வருவதாகக் கேள் விப்பட்டன்.


இப்பவே எங்கட சித்த மருத்துவத் துறையில் முஸ்லிம் மாணவர்கள் நிறை யக் கற்கினம்.


இந்த நிலையில், சித்த மருத்துவத்தை ஆங்கிலத்தில விரி வுரை ஆற்றினால் பிறகென்ன? சிங்கள மாணவர்களும் வந்து சேருவினம். அதுக் குப்பிறகு சித்த மரு த்துவமும் எங்க ளிட்ட இருந்து பறி போகும்.


கங்காணி: விதானையார் சொல் லுறது நூறுவீதம் உண்மை. எங்கட யாழ்ப்பாணப் பல் கலைக்கழகத்தில மருத்துவபீடம், பொறியியல் பீடம், விஞ்ஞான பீடம், சட்டத்துறை ஆகிய வற்றில சிங்கள மாணவர்களே அதி கமாக இருக்கினம்.


இதற்கு இந்த வருடம் யாழ்ப்பா ணப் பல்கலைக் கழகத்தில நடந்த 39 ஆவது பட்டமளிப்பு விழா நல்ல எடுத்துக்காட்டு.


வாத்தியார்:எல்லாம்எங்கடையள் செய்த வேலை. தமிழ் மக்களு க்கு ஒரு பல்கலைக் கழகம் தேவை எண்டு கேட்டம். இலங்கையில நாங்கள் கேட்டது கிடை த்ததெண்டால், அது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மட்டும் தான். இரு ந்தும் அதையும் நாங்கள் தாரை வார்த்துக் கொடுத் திட்டம்.


சாத்திரியார்: என்ன வாத்தியார் சொல்லுறி யள்.


வாத்தியார்: விஞ்ஞானபீடத்தில் முதல் வருட விரிவுரைகள் தமிழ் மொழியில நடக்கும் எண்ட கலைத்திட்டம் இருந்திருக்குமாயின், சட்டத்துறையில் முதல் வருடம் தமிழில் விரி வுரை என்ற நிபந்தனை ஏற்படுத்தப்பட்டிருக்குமா

யின், எங்கட தமிழ் மாணவர்களுக்கான சந் தர்ப்பம் குறித்த துறை களில் அதிகமாக இருந் திருக்கும்.


என்ன செய்யிறது. ஏதோ ஆங்கிலத்தில வெட்டி விழுத்தப் போறமெண்டு வெளிக் கிட்டு, கடைசியாக எங் கட பிள்ளைகளுக்கு ஈனத்தை இழைத்தது தான் மிச்சம்.


இவ்வாறு வாத்தியார் கூற, ஆலடி நிசப்த மாகியது. நிசப்தத்தைக் கலைக்கப் பண்டிதர்பரமலிங்கம் எழுந்தார்.


பண்டிதர்: என்ன இருந்தாலும் எங்கட

சித்த மருத்துவத்துறை தமிழ் மொழியில நட க்க வேணும். சித்த மருத் துவம் என்பது சித்தர் கள் தந்தது.


தமிழ் மொழியில இருக்கிற சித்த மருத்து வத்தை ஆங்கில மொழி யில நடத்துவ தென்பது - தமிழை அழிப்பதற் கான திட்டம் எண்டு தான் சொல்ல வேணும்.


கடும் தமிழாக இருக் கிற திருமந்திரத்தை, பரராஜசேகரத்தை வாசி த்து விளங்குவதிலேயே இடர்பட வேண்டியிருக் குது.


இந்த நிலையில, திரு மந்திரத்தை - பரராஜ சேகரத்தை ஆங்கிலத் திற்கு மாற்றி கற்பிப்ப தென்பது சாத்தியமற்றது.


ஆகையால, எங்கட சித்த மருத்துவத்துறையை தொடர்ந்தும் தமிழில் -நடத்த வேணும்.


அப்படி யாரேனும் ஆங்கிலத்திற்கு மாற்ற முற்பட்டால், எங்கட யாழ். பல்கலைக்கழக மாண வர்கள் தமது கடும் எதிர் ப்பைத் தெரிவிப்பதோட, தொடர் போராட்டங்க ளையும் நடத்த வேணும்.


இவ்வாறு பண்டிதர் பரமலிங்கம் கோபா வேசத்துடன் கூற, ஆலடி நிசப்தமாகியது. நிசப்தத் தைக் கலைக்க சிறாப்பர் கனகசபை குரல் கொடு த்தார் .


சிறாப்பர்: சித்த மருத்துவத் துறையை தொடர்ந்தும் தமிழ் மொழியில நடத்துறது எவ்வளவு முக்கியமோஅதுபோல சித்த மருத் துவத்தில பட்டம் பெற் றவர்களுக்கு வேலை வழங்குவதும் மிகவும் அவசியம்.


இருந்தும் சித்த மருத் துவர்கள் பலர் வேலை இல்லாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரி யது.


விதானையார்: ஒவ் வொரு பிரதேச சபை களும் மாநகர சபையும் இதர பட்டின, நகர சபைகளும் தத்தம் பிர தேசங்களில சித்த ஆயுள் வேத வைத்தியசாலை களைத் திறக்க வேணும்.


அவ்வாறு திறந்தால், எங்கட மக்கள் சித்த மருத் துவத்தை நாடுவினம்.


இன்றைக்குப் பாரு ங்க, யாழ்ப்பாணப் போதனா வைத்திய சாலையில் சனங்கள் குவிந்து நிற்கினம்.


உண்மையில யாழ். போதனா வைத்திய சாலையில குவிகிற மக்களின்ர எண்ணிக் கையைக் கணிசமாகக் குறைக்க வேணும்.


இதே எண்ணிக்கை தொடர்ந்தும் யாழ். போதனா வைத்திய சாலைக்குச் சென்றால், மரணம் இன்னும் அதிக ரிக்குமேயன்றி,அத னைக் குறைக்க முடியாது.


இதையேன் சொல்லு றன் எண்டால், யாழ். போதனா வைத்திய சாலையில பணியாற்று கிறவர்களில கணிச மானவர்கள் தாங்கள் அரச சம்பளத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் எண்ட நினைப்பை மற ந்து செயற்படுகினம்.


ஆகையால, யாழ். போதனா வைத்திய

சாலைக்கு நோயாளர் கள் செல்வதைத் தவிர் த்து, அவரவர் தத்தம் ஊரில இருக்கிற பிரதேச வைத்தியசாலைகளுக்குச் செல்வதுதான் உத்தமம்.


அதேபோல ஒரு குறிப்பிட்ட வயது வந் திட்டால், சித்த மருத் துவத்தை நாட வேணும்.


சித்த மருத்துவர்களும் மிகவும் அன்பாகப் பொதுமக்களுடன் நட ந்து, தங்களுடைய மருத் துவத்தின் சிறப்பை நிரூபிக்க வேணும்.


இதைவிட்டிட்டு அவர் களும் ஏனோ தானோ எண்டால், சித்த மருத் துவம் எங்களிட்ட இரு

ந்து பிரியாவிடை பெற்று விடும் கவனம்.


கங்காணி: விதா னையார் சொல்லு வது உண்மை தான். ஆனால் பிரதேச வைத்தியசாலை களும் சிறப்பாகச் செயற்பட வேணும்.


மூப்பர்: பிரதேச வைத்தியசாலைகள் சிறப்பாகச் செயற்படு வதாக இருந்தால், அந்தந்தப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் அதில கவனம் செலு த்த வேணும்.


ஆனால் சில பணிப் பாளர்கள் பழி தீர்க் கிறதில கவனம் செலுத்திகினமே தவிர, நோயாளர்க ளுக்குச் சிறந்த மரு த்துவ சேவையை வழங்க வேணும் எண்டு நினைக்கிற தில்லை.


இத்தகையவர்க ன் கொடுமையால்,

சேவை மனப்பாங்கு கொண்ட சுகாதாரப் பணிப் பாளர்களும் மனம் நொந்து தாமுண்டு தமது வேலையுண்டு என ஒதுங்கிக் கொள் ளுகினம்.


வாத்தியார் :

என்ன இருந்தாலும் எங்கட பிரதேச வைத்தியசாலைக ளைத் தரம் உயர்த்த வேணும். அங்கு மருத்துவ வசதி களை ஏற்படுத்த வேணும்.


பிரதேச வைத்தியசாலைகளில் இரு ந்து, மேலதிக சிகிச் சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப் பிறது எண்ட பேச் சுக்கே இடமிருக் கக் கூடாது.


கங்காணி : ஓ!யாழ். போதனா வைத் தியசாலையின்ர மேல திக சிகிச்சை என்பது மரண விசாரணை தானே.


ஆகையால, மேல திக சிகிச்சையை யும் பிரதேச வைத் தியசாலைகள் வழங் குவதுதான் உத்தமம்.


இவ்வாறு கங் காணி கூற, அந் நேரம் பார்த்து ஆல டிப் பிள்ளையார் கோவில் கண்டா மணியும் ஒலிக்க, ஆலடியில் இருந்த வர்கள் எழுந்து கோயி லுக்குச் சென்றனர்.


ஆதித்தன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.