தாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் ஆலய கொடியேற்றம்!📸
யாழ்ப்பாணத்தில் உள்ள தாவடி நகரத்தில் அமைந்துள்ள ஆலயமாக தாவடி அருள்மிகு ஸ்ரீ அம்பலவாண வேத விநாயகர் கோவில் வருடாந்த மஹோற்ஷவம் இன்று நிகழும் குரோதி வருடம் பங்குனித் திங்கள் 15ம் நாள் (29.03.2025) சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
வெகு சிறப்பாக பூசைகள் இடம்பெற்றன. இன்றிலிருந்து தொடர்ந்து பதினெட்டுத் தினங்கள் உற்ஷவம் நடைபெற விநாயகப்பெருமான் அருள் பாலித்துள்ளார்.
விசுவாவசு வருடப்பிறப்பன்று சித்திரத்தேரில் பஞ்சமுக விநாயகப் பெருமான் எழுந்தருள்ணர். மறுநாள் தீர்த்தோற்சவத்துடன் உற்க்ஷவம் நிறைவுபெறும். மஹோற்ஷவ காலங்களில் விநாயக அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்துக்கொள்ளுமாறும் அஷ்டமா இஷ்டசித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டிக்கொள்கிறோம் என ஆலய பிரதம குரு குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை