சனி பெயர்ச்சி 2025 -2027 பலன்கள் பரிகரங்கள்.!
ஒரு ஜாதகர் இந்த ஜென்மத்தில் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான்.
வருகின்ற 29ஆம் தேதி சனி பெயர்ச்சி இல்லை திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு.வாக்கிய பஞ்சாங்கப்படி 2026 ஆம் ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்றும். 29.ஆம் தேதி அமாவாசை பூஜை மற்றும் சனி பெயர்ச்சி பூஜை,வேள்வி
நடைபெறும்.திருகணித பஞ்சாங்கத்தின் படி (29.3.2025) இரவு 9.44 மணிக்கு தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இந்த கிரகப்பெயர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது.
சனி பகவான் தனது 3-ம் பார்வையால் கால புருஷ 2-ம் இடமான ரிஷப ராசியையும், 7-ம் பார்வையால் கால புருஷ 6-ம் இடமான கன்னி ராசியையும், 10-ம் பார்வையால் கால புருஷ 9-ம் இடமான தனுசு ராசியையும் பார்க்கிறார்.
கிரகங்களில் சனி கிரக பெயர்ச்சியை பற்றிய எதிர்பார்ப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். ஒரு ராசியில் அதில் வருடம் நின்று ஜீவனத்தை நிர்ணயிப்பவர் என்பதால் சனிப்பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் உள்ளது.
தற்போது கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லும் சனி பகவான் நமக்கு நல்லது செய்வாரா? என்ற என்ற எதிர்பார்ப்பும் அனைவருக்கும் இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். அது அவரவர்களின் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை பொருத்தே அமையும். ஒரு ஜாதகர் இந்த ஜென்மத்தில் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான்.
ஒருவர் எந்த மனத்தாங்கலும் இன்றி நன்றாக இருக்கிறார் என்றால் அவருடைய சுய ஜாதகத்திலும், கோச்சாரத்திலும் சனி கிரகத்தின் பங்களிப்பு சாதகமாக உள்ளது என்று பொருள். அதேநேரத்தில் சதா சர்வ காலமும் நிலையான தொழில், உத்தியோகம், நிம்மதியான வாழ்க்கை இல்லாமல் சுய ஜாதகத்திலும் கோச்சாரத்திலும் சனி பகவானின் தாக்கம் உள்ளது என்று பொருள். எப்பொழுதுமே யாராக இருந்தாலும் எதாவது ஏதாவது ஒரு காலகட்டத்தில் சிறுசிறு வேதனை அளிக்கக்கூடிய சம்பவங்கள் நடக்கும். அப்பொழுது ஆறுதலாக இருப்பது பரிகாரங்களே. ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்கள், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரங்களை செய்வது வழக்கம்.
பரிகாரங்கள் செய்ய வேண்டிய ராசிகள்
சிம்மம், கன்னி,துலாம்,விருச்சிகம்,
தனுசு, மகரம்,கும்பம்,மீனம்.
சனிபகவானுக்குரிய மந்திரங்களை ஜெபிக்கவும் சனிக்கிழமை விரதம் இருக்கவும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவழிபடவும் ஏழரை சனி,அஷ்டமசனி,ஜென்மசனி போன்ற பலன்கள் உள்ளவர்கள் பரிகாரங்கள் செய்ய வேண்டியது அவசியம்.
12.மேஷம் -விரையசனி
11.ரிஷபம் -இலாபசனி
10.மிதுனம்-தொழில்,கர்மசனி
09.கடகம்-பாக்கியசனி.
08.சிம்மம்-அஷ்டமசனி.
07.கன்னி-கண்டகசனி.
06.துலாம்-ரண,ருண சனி.
05.விருச்சிகம்-பஞ்சமசனி.
04.தனுசு-அர்த்தாஷ்டம் சனி.
03.மகரம்-தைரிய சனி.
02.கும்பம்- வாக்குசனி.
01.மீனம் -ஜென்மசனி.
சனி பெயர்ச்சி 2025 -2027 எந்தராசிகளுக்கு சனிபெயர்ச்சி நன்மை
மேஷம் விரைய சனி 70%
ரிஷபம் லாப சனி 90%
மிதுனம் கர்ம சனி 80%
கடகம் பாக்கிய சனி 60%
சிம்மம் அஷ்டம சனி 40%
கன்னி கண்டக சனி 60%
துலாம் ரோக சனி 70%
விருச்சிகம் பஞ்சம சனி 60%
தனுசு அர்தாஷ்டம சனி 60%
மகரம் சகாய சனி 80%
கும்பம் பாத சனி 60%
மீனம் ஜென்ம சனி 40%
28/3/2025 ம் தேதி சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இதன் பலன்கள்:
1)மீன ராசிக்கு 7 1/2 சனியில் கடுமையான ஜென்ம சனி ஆரம்பம்
2) மேஷ ராசிக்கு 7 1/2 சனி ஆரம்பம் ( 7 1/2 சனியில் விரைய சனி )
3) ரிஷப ராசிக்கு நன்றாக உள்ளது
4) மிதுன ராசிக்கு நன்றாக உள்ளது
5) கடக ராசிக்கு நன்றாக உள்ளது
(7 1/2 சனி முடிந்துவிட்டது)
6) சிம்ம ராசிக்கு மிக கடுமையாக அஷ்டம சனி ஆரம்பம்
7)கன்னி ராசிக்கு கன்டக சனி ஆரம்பம்
8) துலாம் ராசிக்கு நன்றாக உள்ளது
9) விருச்சிக ராசிக்கு நன்றாக உள்ளது ( அர்த்தாஷ்டம சனி முடிந்துவிட்டது )
10) தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்
11) மகர ராசிக்கு நன்றாக உள்ளது ( 7 1/2 சனி முடிந்துவிட்டது )
12) கும்ப ராசிக்கு 7 1/2 சனியில் கடைசி பாத சனி ஆரம்பம்.
ஒவ்வொருவரும் தமது அன்றாட வாழ்வில் சில எளிய பழக்கவழக்கங்கள் மற்றும் முறையான வழிபாடுகளை மேற்கொள்ளும்போது நல்ல பலன்கள் நடக்க துவங்கும் என்பது நம்பிக்கை. முதலில், அவரவர் குல தெய்வத்தை பிரார்த்திக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினைகளை பிரபஞ்ச சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போது கோவில்களுக்கு சென்று வழிபடுதல் வேண்டும்.
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் வீட்டில் தினமும் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம். லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்கலாம். இவ்வாறு செய்வதன்மூலம் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும். எதிர்வினைகளின் பாதிப்பு இருக்காது. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளை சாப்பிடும்போது அந்த பட்சிகள், விலங்குகளின் கர்மாவையும் கலந்து உண்ண நேரிடும். தினமும் இயன்ற தான தர்மங்கள் செய்யலாம். குறிப்பாக பட்சிகளுக்கும், விலங்குகளுக்கும் உணவிடுவது, வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவது அதிக நன்மையை ஏற்படுத்தும்
.வீட்டில் சமைக்கும்போது என்ன மனநிலையில் சமைக்கிறோமோ அந்த உணர்வானது சமைக்கும் உணவில் கலந்துவிடும். எனவே, சமைக்கும்போது அவரவர் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்தின் நாமத்தை உச்சரித்தபடி சமைத்தால், அன்றைய உணவானது இறை உணர்வுடன் கலந்த பிரசாதமாக மாறி வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.
இதுபோன்று எளிமையான பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாடுகளை செய்வதன்மூலம், இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் அடுத்த இரண்டரை வருடத்திற்கு வீட்டில் அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.
கருத்துகள் இல்லை