தமிழர் பிரதேச காணிகளை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்!
துறைமுக அதிகார சபையால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் பிரதேச காணிகளை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். திருகோணமலையில் துறைமுக சபை அபகரித்துள்ள கருமலையூற்று, நாச்சிக்குடா, சின்னமுள்ளச்சேனை மற்றும் முத்து நகர் மக்களுக்கான காணிகளை விடுவிக்குமாறே ரவூக்ஹக்கீம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துப் பேசினார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்ததாவது:
துறைமுக அதிகார சபை 1984 ஆம் ஆண்டு இக்காணிகளை சுவீகரித்திருந்தது.யுத்தம் முடிந்ததால்,
இதன் உரிமையாளர்கள் தங்களது காணிகளில் பயிரிடச் சென்ற வேளையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சின்ன முள்ளசேனை, குடாக்கரை மற்றும் முத்து நகர் போன்ற பிரதேச காணிகளை வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கும் திட்டத்துக்கும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.விடயமறிந்து ஸ்லத்துக்கு விரைந்த அரச தரப்பு எம்.பியான ரொஷான் அக்மீமன இவ்விடயத்தைத் தீர்த்துத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் துறைமுக அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரவுடன் கலந்துரையாடி கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம்.
இப்பிரதேசத்தில் வாழும் மக்களால் மலசலகூடத்தைக் கூட அமைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படு
கிறது.நீண்டகாலமாக இப்பிரதேச மக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.சுற்றுச்சூழல் தமது பயிர் நிலங்களின் உரிமைகளையும் இம்மக்கள் இழந்துள்ளனர்.எனவே,மனிதாபிமான இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை