யாழில் சிங்கள வர்த்தக சங்கத்தால் கற்றல் உபகரணங்கள்!

 


யாழ்ப்பாணம் சிங்கள வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் இன்று (15) வழங்கி வைக்கப்பட்டன.


இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம் நாக விகாரையில் வைத்து யாழ்ப்பாணம் சிங்கள வர்த்தக சங்கத்தினரால் 100 பாடசாலை சிறுவர்களுக்கான சுமார் ரூ. 8000 பெறுமதியுடைய கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் இங்கிராங்கொட பௌத்த பீட தலைவரும் வடமத்திய மாகாண பிரதான மலைத்தலைவருமான ஸ்ரீ கெத்த ஸ்ரீ சீவிலி, நாகவிகார விகாராதிபதியும் சிங்கள வர்த்தக சங்கத்தின் ஆலோசகருமான ஸ்ரீ விமல தேரர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், 512 படைப்பிரிவின் மேஜர் ஜென்ரல் நிசாந்த முத்துமால, 512 படைப்பிரிவின் மேஜர் றுவான் கருணாரட்ன, யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க மற்றும் பொலிஸ், இராணுவ அதிகாரிகள், சிங்கள வர்தகசங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.