ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (15) மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 46 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான ந.புவனேந்திரராசா என்பவதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று (14) அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்குள்ள வயல் பகுதியில் வைத்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அவ்வாறு மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில் அவருடன் மது அருந்திக் கொண்டிருந்த 3 பேரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்துள்ளனர்.
வெல்லாவெளி பொலிஸார், மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்பு தடயவியல் பொலிஸாரும் ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று ஸ்தலத்திற்குச் சென்ற களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.வி.ஏ.றஞ்ஜித்குமார் சடலத்தைப் பார்வையிட்டு உடற்கூற்றுப்பரிசோதனைகுட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை