விரைவில் முல்லைத்தீவு,மன்னார் மாவட்டதிக்கு தீயணைப்புப் பிரிவு!


முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தீயணைப்புப் பிரிவை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக உலக வங்கியின் உதவியுடன் 60.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்ததாவது:


இன்று நாட்டின் பல பகுதிகளிலும் தீயணைப்புத் துறை இல்லை. அந்தக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதற்கட்டமாக முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவை அமைப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் 60.5 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வடக்கு மாகாண செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணிகள் நிறைவுசெய்யப்படும் – என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.