பூநகரி பிரதேச சபைக்கு தமிழரசுக் கட்சி வேட்புமனுத் தாக்கல்!📸

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனுவை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் இன்றையதினம் (26) தாக்கல் செய்துள்ளனர்.


நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் நடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், 


மேனாள் தவிசாளர்களான சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், அருணாசலம் வேழமாலிகிதன், சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பூநகரி பிரதேச சபையின் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம், புனித திரேசாள் தேவாலயம் மற்றும் கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயம் என்பவற்றில் சமயாசார வழிபாடுகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மேற்படி சபைக்கான வேட்புமனு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.