நல்லூர் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அர்ச்சுனா - ரஜீவன் நக்கல் நையாண்டி!


யாழ். நல்லூர் பிரதேச செய லக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப் பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் பிரதேச ஒருங்கிணைப் புக் குழுத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோர் ஒருவருக்கொருவர் அரசியல் ரீதியான நக்கல் நையாண்டி கள் செய்து நேரத்தை வீண் விரயம் செய்ததால் கூட்டத் தில் பங்கேற்ற பல பொதுமக் கள் ஆத்திரமடைந்தனர்.


நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட் டம் நேற்று நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத் தில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தலைமையில் இடம்பெற்றது.


கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.


இதன்போது, பல விடயங்களில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ரஜீவன் ஆகியோர் ஒருவருக்கொருவர் அரசியல் ரீதி யான நக்கல் நையாண்டிகள் செய்து நேரத்தை வீண்விரயம் செய்ததால் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.


"உங்கள் அரசியலையும் நக்கல், நையாண்டிகளையும் இங்க கதைச்சு நேரத்தை வீணாக்காதீர்கள்" என்று சபையில் அவர்கள் காட்டமாகத் தெரி வித்தனர் .


அதன் பின்னர் ஓரளவு அரசியல் நையாண்டிகள் இன்றிக் கூட்டம் முன் னெடுக்கப்பட்டது.


கூட்டத்தில் வீதிப் புனரமைப்பு, புகையிரதக் கடவை அமைப்பு, வீதிச் சமிக்ஞை பொருத்துதல், வடிகால மைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் பற்றிப் பேசப்பட்டது.


குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச் சுனா, சிறீபவானந்தராஜா உள்ளிட் டோரும் துறைசார் திணைக்களப் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக் களின் பிரதிநிதிகள், கிராமசேவகர் கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் அரசியல் கருத் துக்கள் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.