மோசடியில் சிக்கிய வைத்தியர் அர்ச்சனா! மீண்டும் கைதாவாரா??
வேட்பு மனு தாக்களில் அநேகமாக அனைத்து வேட்பாளர்களுக்கும் போலியான கையெழுத்து வைக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை சட்டப்படி கிரிமினல் குற்றம் என்று சட் ஜீபிடி சொல்கிறது.
அதுவும் தலைமை வேட்பாளர் ஒரு வழக்கறிஞராக இருந்து கொண்டு இவ்வாறு போலியான கையெழுத்துக்களை வைத்து தேர்தல் ஆணைக்குழுவை ஏமாற்ற முனைந்திருக்கிறார்கள்.
இவ்வாறு ஒரு வெளிப்படையான குற்றத்தை செய்து விட்ட பிறகும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுமளவுக்கு இலங்கை தேர்தல் ஆணைக்குழு பலவீனமானதாக உள்ளதா?
சாதாரண முகநூல் பாவனையாளர்களே இவை போலியான கையெழுத்துக்கள், ஒரே நபரினால் வைக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கும் பொழுது, தேர்தல் ஆணைக்குழு இதை கண்டு கொள்ளாமல் விடுவது எப்படி யாராவது? இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள்.
குறிப்பாக ஏமாற்று வேலை செய்த தலைமை வேட்பாளரான வழக்கறிஞர் மீது கடுமையாக நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு எடுக்க வேண்டும்.
அந்தக் சுயேச்சை குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் எம் பி யின் அண்ணா, அண்ணாவின் மகன் என குடும்பமாக சேர்ந்து ஒரு பெரிய ஏமாற்று வேலையை செய்து முடித்திருக்கின்றார்கள்.
வெறுமனே வெளிநாட்டில் இருக்கும் உலக அறிவு குறைந்த அப்பாவி சனத்தை ஏமாற்றி காசு பெறுவதற்காக ஒரு குடும்பமாக சேர்ந்து, பொய்யான வேட்பாளர்கள் பெயரைப் போட்டு , திட்டமிட்ட வகையில் இந்த திருகுதாளத்தை செய்திருக்கின்றார்கள்.
எப்படி இப்படி ஒரு வெளிப்படையான குற்றத்தை செய்து விட்டுபின்பும். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தப்பித்துக் கொள்கிறார்கள்?
இலங்கை நீதித்துறை அந்தளவு பலவீனமானதா?
மன்னார் நீதிமன்றத்தை ஏமாற்றியது, சாதகச்சேரி நீதிபதியை பற்றி கேவலமாக மிரட்டி எழுதியது என்று இலங்கை நீதித்துறையையே கேவலப்படுத்தி நீதித்துறை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதற்கு உதாரணமாக இருப்பவன் இன்று தேர்தல் ஆணைக்குழுவையும் திட்டமிட்டு ஏமாற்றுகின்றான். பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனுவிலும் இந்த மோசடி செய்யப்பட்டதா?
இதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது ஏனென்றால் இது இலங்கை. இலங்கை தேர்தல் ஆணைக்குழு!
ஆசியாவின் அதிசயம்!
யாழ் மாவட்ட தேர்தல் ஆணைக்குழு ஆணையாளரே இதற்கு உங்கள் பதில் என்ன?
Rajeevan Jeyachandramoorthy இதற்காவது உங்கள் அரசு ஏதும் செய்யுமா ? இல்லை அவன் பேசும்போது கேமராவை off பண்ணி வைப்பது போன்ற மிகப்பெரிய தண்டனைகளை கொடுக்குமா ?
நன்றி
Sivachandran Sivagnanam
கருத்துகள் இல்லை