லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது! 📸

 


லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் தீப்பரவல், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது


அருகிலுள்ள மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து காரணமாக, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை (21) முழுவதும் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தீ விபத்து காரணமாக விமான நிலையம் குறிப்பிடத்தக்க மின் தடையை சந்தித்து வருவதாக ஹீத்ரோவின் விமான நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது.


எங்கள் பயணிகள் மற்றும் சக ஊழியர்களின் பாதுகாப்பைப் பராமரிக்க, ஹீத்ரோ விமான நிலையம் மார்ச் 21 இரவு 11:59 வரை மூடப்படும் என்றும் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியது


அத்துடன், பயணிகள் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் தகவலுக்கு அவர்களின் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் ஹீத்ரோ விமான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹீத்ரோ விமான நிலையம் இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிலையமாகும்.


இது ஒவ்வொரு நாளும் சுமார் 1,300 மேற்பட்ட தரையிறக்கங்கள் மற்றும் புறப்பாடுகளைக் கையாளுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.