சுவையான கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
வெல்லம் - 1 கிலோ
நிலக்கடலை - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
வெல்லப் பாகு - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
தேங்காய் துருவல் - தேவைப்பட்டால்
ஏலக்காய் பொடி - தேவைப்பட்டால்
செய்முறை :
முதலில் நிலக்கடலையை வெறும் சட்டியில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். வெல்லப்பாகை எடுக்க, வெல்லத்தை மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகை ஆற விடவும்.
பாகு நன்றாக திக்காக இருக்க வேண்டும். அதனால், காய்ச்சிய பாகை மீண்டும் காய்ச்ச வேண்டும். இதனுடன் வறுத்த கடலையை சேர்த்து கிளறவும்.
தேவைப்பட்டால், இதில் ஏலக்காய் தூள், துறுவிய தேங்காயாயை சேர்த்துக் கொள்ளலாம். மிதமான சூட்டில் வந்தவுடன், இந்த கலவையை உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.
அசத்தலான கடலை மிட்டாயை சுவைக்கத் தயாராகுங்கள்.
#www.Tamilarul.Net #Tamil #News #TamilNews #tamilshorts #Tamilarulmedia #tamilarul #love #news #history #newvideo #sujiaarthisamayal
கருத்துகள் இல்லை