“கல்விக் கலசம்” அமரர்.திலகவதி பெரியதம்பி!
ஓய்வுபெற்ற முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் அமரர். திருமதி.திலகவதி பெரியதம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
தமிழ் ஈழமாதா என்று புறந் தந்த இன்கலைக்கோயில் அமரர். பெரிய தம்பி அம்மா அவர்கள். புகழோடு தோன்றிய அதியற்புத ஆத்மா சிருஷ்டி, தெய்வீகப் பண்பு களுக்கு இலக்கணமாகவும் இலக் கியமாகவும் அமைந்து மனித உருவிலே நடமாடிய பெருந்தகை.
அமரருடைய தரிசனத்தால் கூர் ப்பு அடையாத கல்விப்புலங்களே இல்லையென்ற பொதுமையாக்கம் மிகையானது அல்ல. அவருடைய ஸ்பரிசத்தால் தூண்டப்பட்டுத் துல ங்கி நிற்கும் சமூக நிறுவனங்கள். வீசிக் கொண்டிருக்கும் ஒளிக்கீற் றுக்கள் அன்னாரின் சேவை நலனை கோடி காட்டுகின்றன.
அரம்போலும் அறிவுக்கூர்மை. பாடறிந்தொழுகும் பண்புநலன். அன்பும், இனிமையும், எளிமை யும் பெண்மையும் குடிகொண்ட ஆத்மராகம், இல்லையென்னாது எவருக்கும் இயலாதென்னாது இன்முகத்தோடு உதவும் பெருந் தன்மை, ஒட்டுமொத்தமாகச்சேவைக் கென்றே தன்னை வரித்துக் கொண்ட வள்ளன்மை இவைய னைத்தையும் கொண்ட மீயுயர் பெண்மணியாக அன்னாரை அடை யாளமிடலாம்.
அமரர். பெரியதம்பி அம்மா அவர்கள் தான் கல்வி கற்ற மெத டிஸ்த மகளிர் கல்லூரியை உண் மைக் கமலத்தில் வைத்துப் பூசித்த ஒருவர். பெண் கல்வி முளைவிட்டு வளர்ச்சியடைந்த காலப்பகுதியில் கல்விகற்று விவசாய விஞ்ஞான பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுத் தனது கல்லூரிக்குப் பெருமையும் புகழும் தேடிக்கொடுத்தவர். அக்காலத்திற் கல்விகற்ற பெண்மணிக ளுக்கு வழிகாட்டியவர். பல்கலைக் கழகக் கல்வியை நிறைவுசெய்த பின் கல்விப்புலத்திலே ஆசிரியராக அடிபதித்த அமரர்.தி.பெரியதம்பி கவ்வி நிர்வாகக் கட்டமைப்பில் பல் வேறு பதவிகளையேற்று இறுதி யாக மாகாணக் கல்விப்பணிப்பாள ராக உச்சம் தொட்டவர். எத்தகைய உயர் பதவியிலிருந்த வேளையி லும் மாணவர் கல்வி வளர்ச்சியி னையே தனது உயரிய குறிக் கோளாகக் கொண்டவர். அன்னாரி டம் நிதியுதவி பெற்றுப் பல மாண வர்கள் கல்வியிலும் இணைபாடச் செயற்பாடுகளிலும் உச்சம் தொட் டதை எவராலும் மறுக்க முடி யாது. அமரர்.தி. பெரியதம்பி அம்மா அறிவு ஜீவிகளில் அதியற்புதமான வர் என்பதில் எவ்வித ஐயமு மில்லை.
பாரதி நண்பனாய், மந்திரியாய். நல்லாசிரியனாய். பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவ கனாய் கண்டது போல அமரரைப் பல்வேறு நிலைகளிலே கண்டு புளகாங்கிதம் அடைகின்றோம்.
சென்ற இடமெல்லாம் கடமைக் கண்ணோடு கல்விப்பணியாற்றிய சீர்புத்த செம்மல், அதியற்புத் கல்விச் சிந்தனைச் சொரூபி ஈச னோடு அத்துவிதமாகிவிட்டது. அன்னையின் ஆத்மா சாந்தியடைக.
வை. செல்வராசா,
ஓய்வுநிலை மாகாணக்கல்விப்பணிப்பாளர், கரவெட்டி.
கருத்துகள் இல்லை