ஈழத்தின் முதல் பெண் சித்தர் சடையம்மாவுக்கு திருக்கோவில்!
சித்தர் சடையம்மா சுவாமிகளுக்கு 170 ஆண்டுகளின் பின் திருக்கோவில்
(ஈழத்தின் முதல் பெண் சித்தர் சடையம்மாவுக்கு திருநெல்வேலி கிழக்கில் திருக்கோவில் அமைக்கப்பட்டு திருவுருவ சிலை பிரதிஷ்டை இன்று 31.03.2025 திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்தக் கட்டுரை பிரசரமாகிறது.)
திருநெல்வேலி கிழக்கு அருள்மிகு வெள்ளைப் பிள்ளையார் ஆலய புனரா வர்த்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று (31.03.2025) திங்கட்கிழமை 1576260 9.15 மணி முதல் 10,40 வரையான சுபமுகூர்த்த நன்னாளில் நடைபெறவுள்ளது. இதன் சிறப்பம்சமாக ஈழத்தின் முதல் பெண் சித்தர யாழ்ப்பாணத்து நல்லூர் சடையம்மா சுவாமிகளுக்கு புதிதாக ஆலயம் அமைக் கப்பட்டு அவரது திருவுருவச்சிலை பிரதிஷ் டையும் இடம்பெற உள்ளது. சித்தர் சடை யம்மா சுவாமிகள் அவதரித்த ஊரில் 170 ஆண்டுகளின் பின்னர் ஆலயம் அமைக் கப்பட்டுள்ளமை சிறப்பாகும்.
சடையம்மா சுவாமிகள், 19.08.1865 ஆம் ஆண்டு ரோகினி நட்சத்திரத்திலே வீரகத்திப்பிள்ளை-சின்னாச்சிப்பிள்ளை தம் பதியரின் மகளாக முத்தப்பிள்ளை எனும் பிள்ளைத் திருநாமத்துடன் அவதரித்தார். தனது 11ஆவது வயதிலே நந்தி கோத்திரத்தை சேர்ந்த கதிரேசு என்பவரை திருமணம் செய்து இல்லற வாழ்வை ஆரம்பித்தார். இரு பெண் பிள்ளைகளின் தாயாக விளங்கிய இவர் அப்பர் சுவாமிகளது வாக்கிற்கமைய
"தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என்பதற்கமைய சரியைத் தொண்டு புரிந்து இறையாசி பெற்று வரும்நாளில் இமைப் பொழுதும் இறைநாமத்துடன் இல்லறத்தில் துறவற நிலையை பேணி காதலாகி கசிந்து கண்ணீர் மல்க ஆலயந்தானும் அரன் எனத்தொழுமே என்பதற்கமைய பக்தியோகி ஆகிவரும் நாளில் இவரது கணவர் நோய் வாய்ப்பட அது நீங்க நல்லூரான் வாசல் சென்று அவனையே தஞ்சம் எனக் கொண்டு அங்கேயே தங்கியிருந்து சரியை தொண் டாற்றினார்.
இக்காலத்திலே காசி, இராமேஸ்வரம், முதலாய தென்னிந்திய திருத்தலங்களுக்கு சென்று வழிபாடு இயற்றி கங்கை, காவேரி சரஸ்வதி ஆகிய திரிவேணி சங்கமத்திலே புனித தீர்த்தமாடி ஆன்மீக அறிவு கைவரப் பெற்று பதிஞானம், பசு ஞானம் கைவரப் பெற்று அது முதிரப்பெற்று ஞானயோகியா னார். மெல்ல மெல்ல இல்லற வாழ்வை நீக்கி துறவற வாழ்வை ஏற்கும் நாளில் வாலை யம்மனின் அருட்பார்வையால் யோகம் கைவரப் பெற்றார்.
இந்நிலையில் தன் மாங்கல்யத்தை கழற்றி கணவனிடம் கையளித்து குடும்ப வாழ்வைத் துறந்து மக்கள் பணி ஆற்றத் தலைப்பட்டு சமூக நோக்கோடு நல்லூர் தேரடிமடம், கதிர்காம மடம், கீரிமலை மடம் முதலியவற்றை ஈழத்திலும் கடல் கடந்து திருச்செந்தூர் சென்று அங்கேயும் மடம் அமைத்து பசித்தோர் முகம் பார்த்து அன்ன தானப் பணி புரிந்தார். இவர் மனதால் நினைப்பதை அடியவர் தாமாகவே வழங்கி பேருதவி புரிந்தனர். பொன்னும் பொருளும் வாரி வழங்கினர். மடங்கள் அமைத்து பணி புரிந்தார். சுவாமி இராமகிருஷ்ணரின் பொன்மொழிக்கேற்ப "ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காணலாம் என்பதை மெய்ப் பித்தார் வள்ளலார் சுவாமிகளின் திருஞானக் கோட்டம் போல் உணவும் உறையுளும்வழ ங்கி உலமாந்தரை உய்வித்தார். நாடிவரும் அடியவர் தம் மனக் கவலைகளை நீக்கினார்.
இவர் தனது சித்தத்தை சிவன்பால் வைக்க ஏற்ற புண்ணிய இடமாக கீரிமலை எனும் நகுலேஸ்வரத்தை தெரிவு செய்து அங்கே மடம் அமைத்து அங்கே தங்கி இருந்து பணியாற்றத் தொடங்கினார்.
ஆன்மீக உயர் இடமாகிய இவ்விடத்திலே கடல் அலை மோதும் பிதிர்க்கடன் நிறை வேற்றும் இடம் என்பன ஒருங்கே அமைந்த சிறிய மலையிலே தங்கி சித்தர்கள், ஞானி களின் ஆன்மீக தேடலுக்குரிய இடமாக்கி னர். நந்தவனம் அமைத்தார். இப்பணியை நல்லூர் ஆலயம், நல்லூர் சட்டநாதர் ஆலயம், திருநெல்வேலி வாலையம்மன் ஆலயம் போன்றவற்றிலும் மேற்கொண்டார். இத்தனை சிறப்புமிக்க இவர் 1936ஆம் ஆண்டு சுக்கிரவார அனுச நட்சத்திரமன்று தான் ஏற்கனவே கூறியபடி உச்சி வீங்கி தலை பிளந்து சமாதியானார். இவரின் சமாதியானது யோகர் சுவாமிகளின் தலை மையிலே கீரிமலையிலே கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு நிலத்தின் கீழே உள்ள நிலக்கீழ் அறையில் சமாதி வைக்கப்பட்டது. இவரது சடையின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு கதிர்காமம், திருச்செந்தூர் ஆகிய இடங்க ளில் சமாதி வைக்கப்பட்டது.
இவரின் சமாதிக்கு மேலாக கிழக்கு திசை நோக்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. வடக்கு நோக்கி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவரது சமாதிக்கு அருகே குழந்தைவேல் சுவாமி களது சமாதி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இவரது சமாதியானது எவ்வித சேதமின்றி அப்படியே காட்சியளிக்கிறது. இவரது சமாதியில் பிர திஷ்டை செய்யப்பட்ட திருவுருவ சிலைகள் பாதுகாப்பாக ஓரிடத்திலே இருப்பதாக அறிய முடிகின்றது. இவரது மடங்கள் இயங்க முடியாமலும், பெயர் மறைக்கப்பட்டும். அழிக்கப்பட்டுமுள்ளன.
இது சைவத்தமிழ் உலகுக்குப் பெரும் இழுக்கானது. இந் நிலையில் நல்லூர் சடையம்மா மடத்திலே பணியாற்றிய பௌராணிகர் சி. தம்பிஐயா அவர்களால் 1975ஆம் ஆண்டளவில் அருள்மிகு வெள்ளைப் பிள்ளையார் ஆல யத்திலே கொட்டகை அமைத்து அவரின் பணிகளை ஆற்றி 63 மெய்யடியார்களதும்
9 தொகை அடியார்களதும் குருபூசைகளை நடத்தி வந்தார். இக்கைங்கரியம் கைகூடவே வளர்ச்சியடைந்து 2000ஆம் ஆண்டு இந்த மடம் விஸ்தரிக்கப்பட்டு 63 அடி நீள மடம் அமைத்து சின்னத் தலைமை வாத்தியார் எனப்பட்ட ச. நடராசா வாத்தியாரால் திறந்து வைக்கப்பட்டது.
நாளொரு வண்ணமும் இப்பணிவளர்ச் சியுற்று 2025 ஆம் ஆண்டிலே லிங்கம் அறக்கட்டளை ஸ்தாபகரது பேருதவியால் முதன் முதலில் சடையம்மாவிற்கு ஆலயம் அமைக்கப்பட்டு சடையம்மா அவர்களது சமாதி மண் எடுத்துவரப்பட்டு அதன்மீது சடையம்மா சுவாமிகளின் கருங்கல்லி னாலான திருவுருவச் சிலையையும் பிர திஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் இடம்பெறுகின்றது. இவரது வாழ்க்கை வர லாறு உள்ளடக்கிய சமாதிப்பாக்களை சரவணையைச் சேர்ந்த ஆ. தில்லைநாத பிள்ளை என்பவர் 1957ஆம் ஆண்டிலே பண்டிதர் சோ. சபாபதிப்பிள்ளை அவர்களது முகவுரையுடன் திருச்செந்தூர் ஆ. நெல்லை வடிவேற்பிள்ளை அவர்களின் அணிந்து ரையுடனான 60 பாக்கள் கொண்ட சிறு நூலை வெளியிட்டுள்ளார். ஆத்மஜோதி நா. முத்தையா அவர்களும் ஈழத்து சித்தரில் ஒருவராக சடையம்மாவை குறிப்பிட்டு நூல் எழுதி உள்ளார்.
19 ஆம் நூற்றாண்டிலே ஒரு துணிச்ச லான பெண் ஆளுமையாக ஈழம் மற்றும் பாரதம் ஆகிய இரு வேறு நாடுகளுக்கும் சென்று சமய சமூகப் பணியை ஒரு பெண் தொடர்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதனை நிதர்சனமாக்கி தனக்குக் கீழே ஒரு மடாதீனத்தையும் காரியக் கமிட்டியையும் நிறுவி பல்வேறு இடங்களிலும் நிறுவிய மடங்களை ஒருங் கிணைத்து பணியாற்றிய ஒரு பேராளு மையாக சித்துக்கள் கைவரப்பெற்ற பெண் ணாக ஆன்மீகப் பணி புரிந்தமை ஆய்வுப் புலத்திலே மதிப்பீடு செய்யப்படவேண்டிய ஒன்றாகும். ஈழத்துக்கும் நல்லூருக்கும் பெருமை சேர்ந்த ஒரு பெண்ணாக சைவத் தமிழ் உலகு ஏற்று அவரின் பணியை வெளிக்கொணர்ந்து அவர் வழி பயணிப்பது காலத்தின் தேவை எனலாம்.
கலாநிதி.சின்னத்தம்பி பத்மராஜா
கருத்துகள் இல்லை